Published:Updated:

சென்னை அரசு மருத்துவமனையில் ரவுடி வெட்டிக்கொலை!

Vikatan Correspondent
சென்னை அரசு மருத்துவமனையில் ரவுடி வெட்டிக்கொலை!
சென்னை அரசு மருத்துவமனையில் ரவுடி வெட்டிக்கொலை!
சென்னை அரசு மருத்துவமனையில் ரவுடி வெட்டிக்கொலை!

சென்னை: ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ரவுடி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய பொக்கை ரவி என்பவர் சென்னை ராயப்பேட்டை மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

ரவியை நலம் விசாரிக்க வந்தவர்கள் போல் நேற்றிரவு மருத்துவமனைக்கு அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்த 9 பேர் கொண்ட மர்ம கும்பல், அவரை சரமாரியாக வெட்டினர். அப்போது ரவியுடன் மருத்துவமனையில் இருந்த சாந்தகுமார் மற்றும் தமிழரசனையும் அந்த கும்பல் கடுமையாக தாக்கியது.

இதில் படுகாயமடைந்த மூவரும் உடனடியாக ராஜீவ்காந்தி அரசு மருத்துமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் ரவுடி பொக்கை ரவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், முன் விரோதம் காரணமாக பொக்கை ரவி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறினர். மேலும் இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.