Published:Updated:

குரூப் 2 தேர்வில் பல்வேறு முறைகேடுகள்: கடலூர் ஆட்சியரிடம் மனு!

Vikatan Correspondent
குரூப் 2 தேர்வில் பல்வேறு முறைகேடுகள்: கடலூர் ஆட்சியரிடம் மனு!
குரூப் 2 தேர்வில் பல்வேறு முறைகேடுகள்: கடலூர் ஆட்சியரிடம் மனு!

கடலூர்: சமீபத்தில் நடந்த குரூப் 2 தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக கடலூர் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

குரூப் 2 தேர்வில் பல்வேறு முறைகேடுகள்: கடலூர் ஆட்சியரிடம் மனு!

கடந்த மாதம் 29 ஆம் தேதி நடைபெற்ற குரூப் 2 தேர்வில், விடைத்தாள் வெளியானது உட்பட பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக அரசு பணியாளர் தேர்வாணைய போட்டித் தேர்வு மாணவர்கள் சங்கத்தை சேர்ந்தவர்கள் இன்று கடலூர் மாவட்ட ஆட்சியர் சுரேஷ் குமாரிடம் மனு அளித்தனர். மனுவை பெற்றுக் கொண்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார்.

இதுகுறித்து அரசு பணியாளர் தேர்வாணைய போட்டித் தேர்வு மாணவர்கள் சங்கத்தை சேர்ந்த தேவனாதன் நம்மிடம் கூறும்போது, ''கடந்த 29 ஆம் தேதி அன்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட குரூப் 2 தேர்வு விடைத்தாள், தேர்வுக்கு 2 நாட்களுக்கு முன்பாகவே வெளியாகியுள்ளது. இதேபோல் கடந்த 2011 ஆம் ஆண்டு கிராம நிர்வாக அலுவலர் தேர்விலும், அதே ஆண்டு நடைபெற்ற குரூப் 2 தேர்விலும் பல்வேறு முறைகேடுகள் நடந்தது.

2012 ஆம் ஆண்டு நடைபெற்ற குரூப் 2 தேர்வு வினாத்தாள் தேர்வுக்கு முன் வெளியானதால் தேர்வு ரத்து செய்யப்பட்டது. அதன்பின் மறு தேர்வு நடத்தப்பட்டது. தற்போது, மீண்டும் அதேபோல் தேர்வுக்கான விடைத்தாள் சந்தேகத்துக்கு இடமின்றி வெளியாகி இருக்கிறது. அதற்கான ஆதாரங்கள் தற்போது கிடைத்துள்ளது. ஆகவே, இந்த விவகாரத்தில் தகுந்த விசாரணை நடத்தி விடைத்தாள் வெளியாகி இருந்தால் தேர்வை ரத்து செய்துவிட்டு மறுதேர்வு நடத்த வேண்டும்.

மேலும், இந்த முறைகேடுகளில் தொடர்புடையவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற சமூக விரோதிகளால் எங்களை போன்ற அரசு பணியை எதிர் நோக்கியுள்ள மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. ஆகவே, தமிழக முதல்வர் இந்த விவகாரத்தில் தலையிட்டு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

க.பூபாலன்

படம்:
எஸ்.தேவராஜன்