Published:Updated:

தென்னக ரயில்வேயை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் கண்டன ஆர்ப்பாட்டம்!

Vikatan Correspondent
தென்னக ரயில்வேயை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் கண்டன ஆர்ப்பாட்டம்!
தென்னக ரயில்வேயை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் கண்டன ஆர்ப்பாட்டம்!

கடலூர்: கடலூர் ஓ.டி. ரயில் நிலைய சந்திப்பில் தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் சங்கங்களில் கூட்டமைப்பின் சார்பில் தென்னக ரயில்வேயை கண்டித்து இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

தென்னக ரயில்வேயை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் கண்டன ஆர்ப்பாட்டம்!

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் சங்கங்களில் கூட்டமைப்பின் கடலூர் மாவட்ட தலைவர் சந்தோஷ் நம்மிடம், ''மாற்றுத்திறனாளிகளின் ரயில் பெட்டியில் மற்ற ரயில் பெட்டிகளில் இருப்பதுபோல் ஒரு டிக்கெட் பரிசோதகர் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் பெட்டியில் அத்துமீறி பயணிக்கின்ற அனைத்து ரயில்வே ஊழியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் அல்லாதவர்கள் மீது பயணத்தின்போது, மாற்றுத்திறனாளிகள் ஊனத்தை கிண்டல் செய்பவர்கள் மீதும் இந்திய குற்றவியல் தண்டனை சட்டம் 268ன் கீழ் உடனடியாக வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும்.

மேலும், மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டம் 1995ன் கீழ் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளை வேண்டுமென்றே ஆக்கிரமிப்பு செய்பவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் 64-ன் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும். இதே கோரிக்கையை வலியுறுத்தி நாளை விருத்தாசலத்தில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்" என்றார்.

க.பூபாலன்

படம்:
எஸ்.தேவராஜன்