Published:Updated:

'பைக்'கில் கடத்தி வந்த 10 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல்!

விகடன் விமர்சனக்குழு
'பைக்'கில் கடத்தி வந்த 10 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல்!
'பைக்'கில் கடத்தி வந்த 10 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல்!
'பைக்'கில் கடத்தி வந்த 10 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல்!

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் அருகே இருசக்கர வாகனத்தி்ல் எடுத்து வந்த 10 கிலோ தங்கக் கட்டிகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கோட்டைபட்டினம் கிழக்கு கடற்கரை சாலை வழியாக தங்கம் கடத்தப்பட்டு வருவதாக சுங்கத்துறைக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து, வருவாய்த்துறையினருடன், சுங்கத்துறை அதிகாரிகள் இன்று காலை திடீரென கிழக்கு கடற்கரை சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேரையும், வாகனத்தையும் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். இதில் மறைத்து வைத்திருந்த 10 கிலோ தங்க கட்டிகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இரண்டு பேரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள், கீழக்கரையை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்தது. இதையடுத்து, இரண்டு பேரையும் அறந்தாங்கி அழைத்து சென்ற சுங்கத்துறை அதிகாரிகள், தங்க கட்டிகள் எப்படி வந்தது, எதற்காக எடுத்து சென்றீர்கள் என்ற கோணத்தில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோட்டைபட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில், கடந்த 6 மாதத்தில் 4 முறை தங்கம் கடத்தல் சம்பவம் நடந்துள்ளது. அப்போது, பேருந்தில் கடத்தி கொண்டு செல்லப்பட்ட தங்க கட்டிகள், தற்போது இருசக்கர வாகனத்தில் கடத்தி வரப்படுகிறது.