Published:Updated:

கரும்புக்கான பாக்கி தொகை: ஆட்சியரை முற்றுகையிட்ட விவசாயிகள்!

விகடன் விமர்சனக்குழு
கரும்புக்கான பாக்கி தொகை: ஆட்சியரை முற்றுகையிட்ட விவசாயிகள்!
கரும்புக்கான பாக்கி தொகை: ஆட்சியரை முற்றுகையிட்ட விவசாயிகள்!

திருவண்ணாமலை: கரும்புக்கு மாநில அரசு அறிவித்த பரிந்துரை விலையை வழங்காத தனியார் சர்க்கரை ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.

கரும்புக்கான பாக்கி தொகை: ஆட்சியரை முற்றுகையிட்ட விவசாயிகள்!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் ஏ.ஞானசேகரன் தலைமையில் மாதந்திர விவசாயிகள் குறைதீர்ப்புக் கூட்டம் இன்று (22ஆம் தேதி) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில்,  கரும்புக்கான பாக்கி தொகையை பற்றி விவசாயிகள் ஒவ்வொருவராக கூறினர். அதற்கு, ‘ஒருவர் சொன்ன கோரிக்கையை மற்றொருவர் கூறாமல் வேறு பிரச்னைகளை பேசுங்கள்' என மாவட்ட ஆட்சியர் கூறினார்.

இதையடுத்து, மாவட்ட ஆட்சியரிடம் பல விவசாய சங்கங்களை சேர்ந்தவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், ஆட்சியரை முற்றுகையிட்டு, கோரிக்கையை முழக்கமிட்டனர்.

கரும்புக்கான பாக்கி தொகை: ஆட்சியரை முற்றுகையிட்ட விவசாயிகள்!

அதனைத் தொடர்ந்துப் பேசிய தென்னிந்திய கரும்பு விவசாயிகள் சங்கத்தின் செயல் தலைவர் கே.வி.ராஜ்குமார், ''மாநில அரசு பரிந்துரை செய்த விலையை (எஸ்.ஏ.பி)  திருவண்ணாமலை மாவட்டத்தில் இருக்கும் நான்கு தனியார் சர்க்கரை ஆலைகள் வழங்க மறுக்கிறது. இந்த நான்கு சர்க்கரை ஆலைகளும் சேர்த்து மொத்தம் 55 கோடி ரூபாய் பாக்கி வைத்திருக்கிறது.

இதன்மீது மாவட்ட ஆட்சியரான நீங்கள் இதுவரையில் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். விரைவிலேயே அதிகாரிகள், விவசாயிகள், ஆலை நிர்வாகத்தினரை அழைத்து முத்தரப்புக் கூட்டத்தினை நடத்தி தீர்வு ஏற்படுத்த வேண்டும்’’ என்றார்.

இதற்கு பதிலளித்து பேசிய மாவட்ட ஆட்சியர் ஏ.ஞானசேகரன், ''இந்தப் பிரச்னை மீது சட்டப்படியாக நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.