Published:Updated:

தமிழகத்தில் எண்டோசல்ஃபானுக்கு தடை: அமைச்சர்

சென்னை, ஆக.17,2011

தமிழ்நாட்டில் எண்டோசல்ஃபான் பூச்சிக்கொல்லி மருந்தை வைத்திருக்கவோ, விற்கவோ கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவித்தார். ##~~##

சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை வேளாண்மைத்துறை மானிய கோரிக்கையின் மீது நடந்த விவாதத்தின் போது அமைச்சர் செங்கோட்டையில் கூறுகையில், "எண்டோசல்ஃபான் பூச்சிக்கொல்லி மருந்து கேரளாவில் பாதிப்பை ஏற்படுத்தியதால் அங்குள்ள நீதிமன்றம் எண்டோசல்ஃபான் பூச்சி மருந்திற்கு தடை விதித்தது.

பின்னர் உச்சநீதிமன்றமும் இதனை தடை செய்திருக்கிறது. தமிழ்நாட்டில் எண்டோசல்ஃபான் பூச்சிக் கொல்லி மருந்து வைத்துக் கொள்ளவோ, விற்கவோ கூடாது என்று உத்தரவிடப்பட்டிருக்கிறது," என்றார்.

மேலும், "பி.டி.கத்தரிக்காயை சோதிக்க கூடாது என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார்," என்றார் அமைச்சர்.

அடுத்த கட்டுரைக்கு