Published:Updated:

தூத்துக்குடி மாநகராட்சி மேயர் தேர்தலில் மந்தமான வாக்குப்பதிவு!

Vikatan Correspondent
தூத்துக்குடி மாநகராட்சி மேயர் தேர்தலில் மந்தமான வாக்குப்பதிவு!
தூத்துக்குடி மாநகராட்சி மேயர் தேர்தலில் மந்தமான வாக்குப்பதிவு!

தூத்துக்குடி: தூத்துக்குடி மாநகராட்சி மேயர் தேர்தலில் மந்தமான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 22.46 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.

தூத்துக்குடி மாநகராட்சி மேயர் தேர்தலில் மந்தமான வாக்குப்பதிவு!

தமிழகத்தில் உள்ளாட்சி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பதவிக்கு அ.தி.மு.க சார்பில் அந்தோணி கிரேசி, பா.ஜ.க சார்பில் ஜெயலட்சுமி உள்பட 7 பேர் போட்டியிடுகின்றனர்.

தூத்துக்குடி மாநகராட்சி மேயர் தேர்தலில் மந்தமான வாக்குப்பதிவு!

காலையில் இருந்தே வாக்கு பதிவுகள் மந்தமாக நடந்து வருகிறது. 11 மணி நிலவரப்படி 22.46 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. பிற்பகலுக்கு பிறகு வாக்குப்பதிவில் விறுவிறுப்பு இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தூத்துக்குடி மாநகராட்சி மேயர் தேர்தலில் மந்தமான வாக்குப்பதிவு!

வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களுக்கு வெளியே, வெளியூரை சேர்ந்த அ.தி.மு.க.வினரே குவிந்துள்ளனர். பாஜகவினரும் குவிந்துள்ளதால் அங்கு பாதுகாப்புக்கு காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

-சரவணபெருமாள்

படங்கள்:
சிதம்பரம்