Published:Updated:

108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் பணிக்கு திருச்சியில் இன்று நேர்முக தேர்வு!

108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் பணிக்கு திருச்சியில் இன்று நேர்முக தேர்வு!
108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் பணிக்கு திருச்சியில் இன்று நேர்முக தேர்வு!
108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் பணிக்கு திருச்சியில் இன்று நேர்முக தேர்வு!

திருச்சி: 108 ஆம்புலன்சில் மருத்துவ உதவியாளர் பணிக்கு திருச்சியில் இன்று நேர்முக தேர்வு நடைபெறுகிறது.

தமிழ்நாடு அரசின் சுகாதார திட்டத்தின் கீழ் திருச்சி, கரூர், பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் 108 ஆம்புலன்சில் மருத்துவ உதவியாளராக பணிபுரிய தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான நேர்முகத் தேர்வு இன்று காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை திருச்சி அரசு பொது மருத்துவமனையில் நடைபெறுகிறது.

இ.எம்.டி பணியிடத்திற்கான வயதுவரம்பு 20லிருந்து 30வரை இருக்க வேண்டும் எனவும், கல்வித் தகுதி பி.எஸ்.சி. நர்சிங் அல்லது ஜி.என்.எம்., ஏ.என்.எம்., டி-பார்ம் அல்லது லைப் சயின்ஸ் பட்டதாரிகளாக மட்டுமே இருக்க வேண்டும். இந்த பணிக்கான சம்பளம் ரூ.8,975 வழங்கப்படும்.

இ.எம்.டி. ட்ரெய்னி பதவிக்கான வயது வரம்பு 19லிருந்து 20க்குள் இருக்க வேண்டும் எனவும் அரசு மருத்துவக்கல்லூரியில் ஒருவருட டெக்னிக்கல் படிப்பு படித்தவராக இருக்க வேண்டும். அவர்கள் தேர்வு முறைகளாக எழுத்துத் தேர்வு, மருத்துவ நேர்முகம், உடற்கூறியல், முதலுதவி, அடிப்படை செவிலியர் பணி தொடர்பானவையாக இருக்க வேண்டும். இந்த பணிக்கான சம்பளம் ரூ.8,272 வழங்கப்படும்.

தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு முழுமையான வகுப்பறை பயிற்சி, மருத்துவமனை மற்றும் ஆம்புலன்ஸ் சார்ந்த நடைமுறை பயிற்சிகளும் அளிக்கப்படும். பயிற்சி காலத்தில் தங்கும் வசதி மற்றும் தினசரி உணவுக்காக ரூ.100 அளிக்கப்படும். மேலும், இது தொடர்பாக 89398-85045, 89398-85034 ஆகிய தொலை பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட 108 ஆம்புலன்ஸ் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

ர.நந்தகுமார்