Published:Updated:

வீராணம் ஏரியிலிருந்து தண்ணீர் திறக்க ஜெயலலிதா உத்தரவு!

விகடன் விமர்சனக்குழு
வீராணம் ஏரியிலிருந்து தண்ணீர் திறக்க ஜெயலலிதா உத்தரவு!
வீராணம் ஏரியிலிருந்து தண்ணீர் திறக்க ஜெயலலிதா உத்தரவு!
வீராணம் ஏரியிலிருந்து தண்ணீர் திறக்க ஜெயலலிதா உத்தரவு!

சென்னை: கடலூர் உள்பட மூன்று மாவட்ட பாசனத்திற்காக வீராணம் ஏரியில் இருந்து வரும் 21ஆம் தேதி முதல்  தண்ணீர் திறந்துவிட முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடலூர், தஞ்சாவூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் உள்ள பாசன பகுதிகளுக்கு சாகுபடிக்காக கீழணை மற்றும் வீராணம் ஏரியிலிருந்து தண்ணீர் திறந்து விடுமாறு வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன.

வேளாண் பெருங்குடி மக்களின் வேண்டுகோளினை ஏற்று, கீழணை மற்றும் வீராணம் ஏரியிலிருந்து சாகுபடிக்காக 21.9.2014 முதல் தண்ணீர் திறந்து விட ஆணையிட்டுள்ளேன்.

இதனால், கடலூர், தஞ்சாவூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் உள்ள 1,31,903 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்"  என்று கூறியுள்ளார்.