Published:Updated:

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் வெள்ளை காகம்!

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் வெள்ளை காகம்!
வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் வெள்ளை காகம்!

செங்கல்பட்டு: வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவுக்கு புது வரவாக வெள்ளை காகம் ஒன்று வந்துள்ளது.

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் வெள்ளை காகம்!

“வெள்ளை காக்கா மல்லாக்கப் பறக்குது” என்று பேச்சு வழக்கில் கிராமத்தில் சொல்வது உண்டு. உண்மையிலேயே வெள்ளைக் காகம் இருக்கின்றதா? என்ற கேள்விக்கு வண்டலூர் வனவியல் பூங்காவில் விடை கிடைக்கும்.

வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் வெள்ளைக் காகம் ஒன்று பார்வையாளர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து நம்மிடம் பேசிய பூங்கா இயக்குனர், “வெள்ளைக் காகங்களை பார்ப்பது மிகவும் அரிதாகும். சில சமயங்களில் நிறம் குறைபாடு காரணமாக கருப்பு நிற காகம் வெள்ளையாக மாறிவிடும்.

அந்த நிறத்தால் அந்த காகம் மற்ற காகங்களில் இருந்து வேறுபட்டு தனிமையில் வாழ வேண்டிய சூழல் ஏற்பட்டு விடுகின்றது. மற்ற பறவைகள் இந்த காகத்தை தாக்குவதால் வாழ்க்கை போராட்டமாக அமைந்துவிடும்.

அப்படிதான் இந்த காகமும் உத்திரமேரூர் அருகே மற்ற பறவைகளின் தாக்குதலால், வாழ முடியாமல் போரட்டத்தை நடத்திக் கொண்டிருந்தது. அதை மீட்டு சிகிச்சை அளித்து வந்தோம். நன்கு குணமடைந்த நிலையில் பார்வையாளர்களுக்கு காட்சி படுத்த முடிவு செய்தோம். இன்றிலிருந்து பூங்காவிற்கு வரும் பார்வையாளர்கள் வெள்ளைக் காகத்தை பார்த்து மகிழலாம்” என்றார்.

-பா.ஜெயவேல்