Published:Updated:

சமூக விழிப்புணர்விற்காக இளைஞர்கள் நடத்திய ரத்த தான முகாம்!

சமூக விழிப்புணர்விற்காக இளைஞர்கள் நடத்திய ரத்த தான முகாம்!
சமூக விழிப்புணர்விற்காக இளைஞர்கள் நடத்திய ரத்த தான முகாம்!

சேலம்: சமூக விழிப்புணர்விற்காக நாமக்கல் மாவட்டத்தில் இளைஞர்கள் ரத்த தான முகாம் நடத்தினர்.

சமூக விழிப்புணர்விற்காக இளைஞர்கள் நடத்திய ரத்த தான முகாம்!

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் சமூக நோக்கத்திற்காக, பெரிய மாரியம்மன் இளைஞர் நற்பணி மன்றத்தை சேர்ந்த இளைஞர்கள் ரத்த தான நிகழ்ச்சியை நடத்தினர். இந்த ரத்த தான நிகழ்ச்சியை குமாரபாளையம் நகர்மன்ற தலைவர் சிவசக்தி தனசேகரன் துவக்கி வைத்தார். இளைஞர்களிடையே ரத்த தானம் செய்வதன் அவசியத்தை ஏற்படுத்துவதற்காக, பெரிய மாரியம்மன் நற்பணி மன்றத்தின் இளைஞர்கள், ஈரோடு அரசு மருத்துவமணையுடன் சேர்ந்து சிறப்பாக இந்த ரத்ததான முகாமை நடத்தினர்.

இந்த முகாமில், குமாரபாளையம் மற்றும் பவானியை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட இளைஞர்களும், பெண்ககள் மற்றும் பெரியவர்களும் கலந்து கொண்டு ரத்தம் வழங்கினர். இதில், அதிக அளவில் கல்லூரி மாணவ, மாணவிகள் ரத்த தானம் செய்தனர். ஒவ்வொருவரிடம் இருந்தும் 350 மில்லி லிட்டர் ரத்தம் தானமாக பெறப்பட்டது.

சமூக விழிப்புணர்விற்காக இளைஞர்கள் நடத்திய ரத்த தான முகாம்!

இந்நிகழ்ச்சியை நடத்திய பெரிய மாரியம்மன் இளைஞர் நற்பணி மன்றத்தின் தலைவர் சுரேந்திரன் கூறும்போது, ''ஆண்டுதோறும் நாங்கள் ரத்த தான முகாமை நடத்தி வருகிறோம். ஆனால், இந்த வருடம் மிக அதிக அளவில் கல்லூரி இளைஞர்கள் ரத்த தானம் செய்துள்ளனர். இதற்காக, நாங்கள் ஒருமாதமாக பல்வேறு அறிவிப்புகளை செய்தும், துண்டு பிரசுரங்களை வழங்கியும் வந்தோம். அதனால் இளைஞர்கள், ரத்த தானம் செய்வதன் அவசியத்தை புரிந்து கொண்டு அவர்களாகவே முன்வந்து ரத்த தானம் செய்துள்ளனர்" என்றார்.

இந்த முகாமில் மருத்துவ ஆலோசனைகளை வழங்கிய ஈரோடு அரசு மருத்துவமணை மருத்துவர் சரவணகுமார், ''நாங்கள் நினைத்ததைவிட அதிக அளவில் இளைஞர்கள் கலந்து கொண்டு ரத்தம் வழங்கி இருக்கின்றனர். ரத்த தானம் செய்வதால் உடலில் உள்ள பழைய ரத்தம் வெளியேறி புதிய ரத்தம் உற்பத்தியாகும். இதனால் உடலுக்கு நன்மை தான். பலரும் இதனை புரிந்துகொள்ளாமல் ரத்தம் வழங்குவதில்லை" என்றார்.

செய்தி, படங்கள்:
கு.ஆனந்தராஜ்
(மாணவ பத்திரிகையாளர்
)