Published:Updated:

காலி பண்ண சொன்னதால் ஆத்திரம்: வீடு மீது பெட்ரோல் குண்டு வீசிய கும்பல்!

காலி பண்ண சொன்னதால் ஆத்திரம்: வீடு மீது பெட்ரோல் குண்டு வீசிய கும்பல்!
காலி பண்ண சொன்னதால் ஆத்திரம்: வீடு மீது பெட்ரோல் குண்டு வீசிய கும்பல்!

பெரம்பலூர்: வீ்ட்டை காலி பண்ண சொன்னதால் ஆத்திரம் அடைந்த கும்பல் ஒன்று, வீட்டின் மீது பெட்ரோல் குண்டை வீசிய சம்பவம் பெரம்பலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

காலி பண்ண சொன்னதால் ஆத்திரம்: வீடு மீது பெட்ரோல் குண்டு வீசிய கும்பல்!

பெரம்பலூர் மாவட்டத்தில் 1வது வார்டு பகுதியில் நீலாவதி அய்யாவு என்ற தம்பதியினர், அவர்களுக்கு சொந்தமான வீட்டில் வசித்து வருகின்றனர். வழக்கம் போல நேற்றிரவு சாப்பிட்டு விட்டு 11 மணியளவில் தூங்க சென்றனர். இன்று காலை 6 மணிக்கு வீட்டிற்கு வெளியே வந்து பார்த்தபோது, வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே காவல் நிலையத்திற்கு அய்யாவு தகவல் தெரிவித்தார். பிறகு காவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்து அவர்களிடம் விசாரணை நடத்தினர்.
 

காலி பண்ண சொன்னதால் ஆத்திரம்: வீடு மீது பெட்ரோல் குண்டு வீசிய கும்பல்!

அப்போது காவல்துறையினரிடம் அய்யாவு, "எங்கள் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசும் அளவிற்கு எங்களுக்கு யாரும் எதிரி இல்லை. இருந்தாலும் எங்களுக்கு ஒருவர் மீது சந்தேகம் இருக்கிறது. எங்களுக்கு சொந்தமான வீட்டை வேறு ஒருவருக்கு வாடகைக்கு விட்டிருந்தேன். சில காரணங்களால் அவர்களை வீட்டை காலிபண்ண சொன்னேன். அவர்கள் காலி செய்ய முடியாது எனக் கூறினர். இதனால் அடிக்கடி  எங்களுக்குள் பிரச்னை ஏற்பட்டது. நீங்கள் வீட்டை காலி செய்தே ஆக வேண்டும் எனக் கூறினோம். அவர்களும் வீட்டை காலி செய்தனர்.

வீட்டை காலி செய்துவிட்டு போகும்போது, எங்களை வீட்டை விட்டு காலி  செய்ய சொன்னதற்கு உங்களை சும்மா விடமாட்டோம். எங்களை வீட்டை விட்டு காலி பண்ண சொன்னதற்கு நீங்கள் வருத்தப்படுவீர்கள் என்று கூறிவிட்டு சென்றனர். ஒருவேளை இவர்கள் இதைச் செய்திருக்கலாம்" என்று தெரிவித்தார்.

இதன் அடிப்படையில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

-ர.ரஞ்சிதா

(மாணவ பத்திரிகையாளர்)