Published:Updated:

ஜெ. விடுதலைக்காக குமரியில் அதிமுகவினர் ரத்தக் கையெழுத்து போராட்டம்!

ஜெ. விடுதலைக்காக குமரியில் அதிமுகவினர் ரத்தக் கையெழுத்து போராட்டம்!
ஜெ. விடுதலைக்காக குமரியில் அதிமுகவினர் ரத்தக் கையெழுத்து போராட்டம்!

நாகர்கோவில்: ஜெயலலிதா விடுதலையாக வேண்டி நாகர்கோவில் அ.தி.மு.க.வினர் இன்று (13ஆம் தேதி) ரத்தத்தில் கையெழுத்திடும் போராட்டம் நடத்தினர்.

ஜெ. விடுதலைக்காக குமரியில் அதிமுகவினர் ரத்தக் கையெழுத்து போராட்டம்!

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா கைது செய்யப்பட்டதை கண்டித்து தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர்  பல்வேறு விதத்தில் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று நாகர்கோவில் நீதிமன்ற ரோட்டில் உள்ள அ.தி.மு.க. அலுவலகம் முன்பு வைக்கப்பட்டுள்ள பேனரில், இரண்டு நர்சுகளின் உதவியுடன் அ.தி.மு.க.வினர் தங்கள் கை விரல்களில் ஊசி மூலம் குத்திக்கொண்டு ரத்தம் சொட்ட சொட்ட ஜெயலலிதா விடுதலையாக வேண்டும் என வேண்டி, தங்கள் கைரேகையை பேனரில் பதித்து  கையெழுத்திட்டனர். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டு கையெழுத்திட்டனர்.

ஜெ. விடுதலைக்காக குமரியில் அதிமுகவினர் ரத்தக் கையெழுத்து போராட்டம்!

இப்போராட்டத்தில் கலந்து கொள்ள வந்த அ.தி.மு.க.வினர் ஆங்காங்கே வாகனங்களை சாலையில் நிறுத்தியதால், பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் செல்லமுடியாமல் அப்பகுதி முழுவதும் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

செய்தி, படங்கள்: ரா.ராம்குமார்