Published:Updated:

மதுரை அருகே 32 லட்சம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல்: இருவர் கைது!

விகடன் விமர்சனக்குழு
மதுரை அருகே 32  லட்சம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல்: இருவர் கைது!
மதுரை அருகே 32 லட்சம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல்: இருவர் கைது!
மதுரை அருகே 32  லட்சம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல்: இருவர் கைது!

மதுரை: சின்னட்டம்பட்டியில் ரூ.32 லட்சம் மதிப்புடைய 320 கிலோ கஞ்சாவை போலீஸார் கைப்பற்றியுள்ளனர்.  இதனை  கடத்திவந்த  2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மதுரையை அடுத்த   திருச்சி-மதுரை சாலையில் சிட்டம்பட்டி பகுதியில் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலிஸார் நேற்று இரவு  வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நிற்காமல் செல்ல முயன்ற ஒரு காரை அவர்கள் தடுத்தி நிறுத்தி சோதனையிட்டனர்.

அப்போது காரினுள் ஒரு ரகசிய பகுதி இருந்தததை கவனித்த போலீஸார், அப்பகுதியை ஆராய்ந்தததில்  கஞ்சா மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. சோதனையில்  வெள்ளை நிற 16 சாக்கு மூட்டைகளில் 20 கிலோ வீதம் 320 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.  இதனையடுத்து அதை கடத்திவந்த சதீஷ் (30), வி.ராஜபிரபு (27)  ஆகியோரை கைது செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை,  ஆந்திர மாநிலம், பெத்தவாசல் பகுதியிலிருந்து கடத்திவந்ததாக அவர்கள் தெரிவித்தனர். கைப்பற்றப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ரூ.32 லட்சம் என போலீஸார் கூறினர். மேலும், இது தொடர்பாக முருகன், சென்னை ஈக்காட்டுத்தாங்கலைச் சேர்ந்த ஆனந்தவேலு ஆகியோர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டிருப்பதாக நுண்ணறிவு பிரிவு போலீஸார் தெரிவித்தனர்.

மதுரையில் கடந்த சில மாதங்களாக  கஞ்சா கடத்தல் தொடர்கதையாகிவருவது சமூக ஆர்வலர்களிடையே கவலையை  அதிகரித்துள்ளது.