Published:Updated:

ஆடைகளை களைந்து சோதனை: போராட்டத்தில் குதித்த திருச்சி சட்டக்கல்லூரி மாணவிகள்!

ஆடைகளை களைந்து சோதனை: போராட்டத்தில் குதித்த திருச்சி சட்டக்கல்லூரி மாணவிகள்!
ஆடைகளை களைந்து சோதனை: போராட்டத்தில் குதித்த திருச்சி சட்டக்கல்லூரி மாணவிகள்!
ஆடைகளை களைந்து சோதனை: போராட்டத்தில் குதித்த திருச்சி சட்டக்கல்லூரி மாணவிகள்!

திருச்சி: சோதனை என்கிற பெயரில் பேராசிரியர்கள் கல்லூரி வளாகத்தில் தங்களிடம் அத்துமீறியதாக குற்றம்சாட்டி திருச்சி அரசு சட்டக்கல்லூரி மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்று மதியம் சட்டக்கல்லூரி வளாகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்ட திருச்சி அரசு சட்டக்கல்லூரி மாணவிகள்  கல்லூரி பேராசிரியர்களுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

அப்போது பேசிய மாணவிகள், "இன்று காலை திருச்சி சட்டக்கல்லூரி மாணவிகள் விடுதிக்கு வந்த கல்லூரி முதல்வர் வின்சன்ட் காமராஜ் மற்றும் கவுரவ விரிவுரையாளர்களான கெளரி, ரம்யா, சிந்துஜா, ஜன்னி,ஜானு உள்ளிட்ட ஐந்து பேர் மற்றும் விடுதி காப்பாளர் கிருஸ்ணா நிலா உள்ளிட்டோர், மாணவிகளை சோதனை நடத்துவதாக கூறி ஆடைகளை கழட்டி காட்டுமாறும், உள்ளாடைக்குள் செல்போன் ஒளித்து வைத்திருப்பதாகவும் கூறி மாணவிகளை நிர்வாண சோதனை நடத்த முயற்சி செய்தார்கள்.

அப்போது மாணவிகள் உள்ளாடைக்குள் செல்போன் வைத்திருப்பதாக சொல்லி மாணவிகளை மிரட்டினர். சோதனையில் ஐந்து செல்போன் மற்றும் சார்ஜர் கைப்பற்றப்பட்டதாக கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது. இப்படி நடந்துகொண்ட பேராசிரியர்கள் மன்னிப்பு கேட்கும்வரை எங்கள் போராட்டம் தொடரும். இதுமனித உரிமை மீறல். இதுகுறித்து முறையான விசாரணை நடத்தவேண்டும்" என்றார்கள்.

கல்லூரி முதல்வர் வின்சன்ட் காமராஜ் 2 முறை பேச்சுவார்த்தை நடத்தியும், தங்களிடம் தரக்குறைவாக நடந்துகொண்ட கவுரவ விரிவுரையாளர்கள், மாணவிகளிடம் மன்னிப்பு கேட்கவேண்டும்; சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கைகளை வைத்து தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மாணவிகளின் போராட்டத்தால் திருச்சி கல்லூரி மாணவிகளிடம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

-சி.ஆனந்தகுமார்
 
படங்கள்:
தே.தீக்‌ஷித்