Published:Updated:

இடிந்து 2 ஆண்டாகியும் சீரமைக்கப்படாத திருவாரூர் கமலாலய குளத்தின் சுவர்!

இடிந்து 2 ஆண்டாகியும் சீரமைக்கப்படாத திருவாரூர் கமலாலய குளத்தின் சுவர்!
News
இடிந்து 2 ஆண்டாகியும் சீரமைக்கப்படாத திருவாரூர் கமலாலய குளத்தின் சுவர்!

இடிந்து 2 ஆண்டாகியும் சீரமைக்கப்படாத திருவாரூர் கமலாலய குளத்தின் சுவர்!

திருவாரூர்: இடிந்து விழுந்து 2 ஆண்டுகளாகியும் சீரமைக்கப்படாத திருவாரூர் கமலாலய குளத்தின் சுவரை விரைவில் கட்டி முடிக்க அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூர் தியாகராஜசுவாமி கோவில் சைவ சமயத்தின் தலைமை பீடமாகும். இக்கோவிலின் மேற்கு கோபுர வாசலின் எதிரே அமைந்துள்ள கமலாலய குளத்தின் நடுவே நாகநாதர் கோவில் அமைந்துள்ளது. ஆலயமாக கருதப்படும் கமலாலய குளம் திருவாரூர் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள மிகப்பெரிய நீர்ப்பரப்பாகும்.

இடிந்து 2 ஆண்டாகியும் சீரமைக்கப்படாத திருவாரூர் கமலாலய குளத்தின் சுவர்!

இந்நிலையில், கமலாலய குளத்தின் வடக்கு பகுதி தடுப்புச் சுவர் கடந்த 2012ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 24ஆம் தேதி பெய்த கனமழை காரணமாக இடிந்து விழுந்தது. இதனால் கமலாலயத்தின் வடக்கு பகுதியில் கனரக வாகன போக்குவரத்து நிறுத்தம் செய்யப்பட்டது.

இதையடுத்து, இடிந்து விழுந்த கமலாலய குளத்தின் தடுப்புச்சுவரை சீரமைக்க கடந்த 2013ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ரூ.95 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து கடந்த 2014ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பணிகள் தொடங்க இருந்த நிலையில், குளத்தில் தண்ணீர் இருந்ததால் தடுப்பு சுவர் கட்டும் பணிகளுக்கு இடையூறு ஏற்பட்டது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
இடிந்து 2 ஆண்டாகியும் சீரமைக்கப்படாத திருவாரூர் கமலாலய குளத்தின் சுவர்!

இதைத் தொடர்ந்து குளத்துக்கு தண்ணீர் வருவதை நிறுத்த தற்காலிக தடுப்பு ரூ.11 லட்சம் செலவில் அமைக்கப்பட்டது. இதனால் தற்போது கமலாலய குளத்தில் குறைந்த அளவு தண்ணீரே உள்ளது. இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் 8ஆம் தேதி புதிதாக பொறுப்பு ஏற்ற மாவட்ட கலெக்டர் மதிவாணன், இடிந்து விழுந்த தடுப்புச்சுவரை சீரமைப்பது தொடர்பாகவும், குளத்தை பழமை மாறாமல் பராமரிப்பது தொடர்பாகவும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, உடனடியாக சீரமைப்பு பணிகளை தொடங்க உத்தரவிட்டார்.

இதையடுத்து, கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு  சீரமைப்பு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

இடிந்து 2 ஆண்டாகியும் சீரமைக்கப்படாத திருவாரூர் கமலாலய குளத்தின் சுவர்!

கடந்த, 2000ஆம் ஆண்டில், இந்த குளத்தில் இருந்த தண்ணீர் முழுவதும், வெளியேற்றப்பட்டு, புதிதாக தேக்கப்பட்டது. அதிலிருந்து, இதுவரை குளம் சுத்தம் செய்யப்படாமல் உள்ளது. இக்குளத்தில், மனிதக் கழிவுகள், பிளாஸ்டிக், பழைய துணிகள், அறுந்த காலணிகள் மிதப்பதோடு, படிக்கட்டுகளிலும் பரவியுள்ளன. மேலும், மதுபாட்டில்களின் கண்ணாடித் துகள்கள் சிதறி கிடப்பதுடன், துர்நாற்றம் வீசுவதால், பக்தர்கள் மன அமைதி இழந்து குளித்து வருகின்றனர்.

விரைவில், குளத்தின் சுவர் கட்டும் பணிகள் முடிவடைந்து, தண்ணீரும் சுத்தம் செய்து தெப்பம் வரும் என  மக்கள் காத்து கொண்டிருகின்றனர்.

த.க.தமிழ் பாரதன்

படங்கள்: ம.பார்த்திபன்
(மாணவப் பத்திரிகையாளர்கள்)