Published:Updated:

மருது சகோதரர்கள் குருபூஜை: கட்சித்தலைவர்கள் அஞ்சலி!

விகடன் விமர்சனக்குழு

சிவகங்கை: சுதந்திர போராட்ட வீரர்கள் மருதுசகோதரர்களின் 213 வது குருபூஜையையொட்டி சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில்  அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் பல்வேறு கட்சித்தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

மருது சகோதரர்கள் குருபூஜை: கட்சித்தலைவர்கள் அஞ்சலி!

காளையார்கோவில்  கோவில்  மருது சகோதரர்கள் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் இந்த நினைவு நாள் நிகழச்சி நடைபெற்று வருகிறது.  இன்று நடந்த நிகழ்வில் புதிய பார்வை ஆசிரியர் நடராஜன், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசு, மூவேந்தர் முன்னணி கழகத்தலைவர் சேதுராமன் ,  ஸ்ரீதர் வாண்டையார், ஃபார்வர்ட் பிளாக் கட்சியை சேரந்த சிற்றரசு, தி.மு.க முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பவானிராஜேந்திரன், உள்ளிட்ட ஏராளமான அரசியல் மற்றும் சமுதாய அமைப்பபை சேர்ந்த பிரமுகர்கள்  நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.

மருது சகோதரர்கள் குருபூஜை: கட்சித்தலைவர்கள் அஞ்சலி!



குருபூஜையையொட்டி மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.  மூன்று காவல்துறை கண்காணிப்பாளர்கள் தலைமையில் ஐநது மாவட்டங்களை சேரந்த 2500 காவல்துறையினர் இதற்கான பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். அசம்பாவிதங்களை தவிர்க்கும் வண்ணம் சிறப்பு சோதனை சாவடிகள் அமைக்கபட்டு, குருபூஜைக்கு வரும் வாகனங்கள் சோதனைக்கு பிறகே அனுமதிக்கபட்டன.

அபுதாஹிர்
படங்கள்:
சாய்தர்மராஜ்.