Published:Updated:

டாஸ்மாக்: இடை நீக்கம் செய்யப்பட்ட 72 பேருக்கு மீண்டும் வேலை!

டாஸ்மாக்: இடை நீக்கம் செய்யப்பட்ட 72 பேருக்கு மீண்டும் வேலை!
டாஸ்மாக்: இடை நீக்கம் செய்யப்பட்ட 72 பேருக்கு மீண்டும் வேலை!
டாஸ்மாக்: இடை நீக்கம் செய்யப்பட்ட 72 பேருக்கு மீண்டும் வேலை!

வேலூர்:  வேலூர் மாவட்டதில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூடுதல் விலைக்கு மது பாட்டில்களை விற்பனை செய்த புகாரின பேரில் இடைநீக்கம் செய்யப்பட்டவர்களில் 72 பேருக்கு மீணடும் பணி வழங்கப்பட்டதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர்.

வேலூர் மாவட்டத்தில் உள்ள் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை குறிப்பிட்ட விலைக்கு அதிகமாக விற்பனை செய்வதாகவும், மதுபானங்களில் கலப்படம் செய்து விற்பனை செய்வதாகவும் தொடர்ந்து புகார் வந்தது.

இதையடுத்து டாஸ்மாக் கடைகளில் சென்னையில் இருந்து ஒரு குழுவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அதைத் தொடர்ந்து முறைகேடு புகார்கள் வந்த கடைகளின் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள், 81 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் மீண்டும் வேலை வழங்கக் கோரி தொடர்ந்து முறையீடுகள் செய்யப்பட்டு வந்தன. இதைத் தொடர்ந்து இடைநீக்கம் செய்யப்பட்டவர்களில் 9 பேர் தவிர மற்ற 72 பேருக்கும் மீண்டும் வேலை வாய்ப்பை வழங்கி மாவட்ட டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டது.

இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரிகள் கூறுகையில், "72 பேர் ஏற்கனவே பணிபுரிந்த இடத்தில் பணியில் அமர்த்தப்படாமல் வேறு இடத்தில் சேர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 9 பேர் மீதான தொடர் விசாரணை இன்னும் நிறைவடைய வில்லை" என்று தெரிவித்தனர்.