Published:Updated:

முடங்கிக் கிடக்கும் 'நம்ம டாய்லெட்' திட்டம்!

விகடன் விமர்சனக்குழு
முடங்கிக் கிடக்கும் 'நம்ம டாய்லெட்' திட்டம்!
முடங்கிக் கிடக்கும் 'நம்ம டாய்லெட்' திட்டம்!

நாமக்கல்: பல லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட 'நம்ம டாய்லெட்' திட்டம் செயல்படாமல் முடங்கிக் கிடக்கிறது.
 

முடங்கிக் கிடக்கும் 'நம்ம டாய்லெட்' திட்டம்!

திறந்தவெளியை கழிப்பறையாக பயன்படுத்தும் பொதுமக்களுக்கு சுகாதார சீர்கேட்டால் ஏற்படும் பல்வேறு நோய்களிலிருந்து மக்களை பாதுகாக்கும் வகையில் கொண்டுவரப்பட்டதுதான் இந்த 'நம்ம டாய்லெட்' திட்டம். இதன் மூலம் தமிழக அரசு, தமிழகம் முழுவதும் அதிக அளவில் மக்கள் கூடும் 400க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த கழிப்பறைகளை அமைக்க திட்டமிட்டது. மேலும் தமிழக உள்ளாட்சித் துறையின் நகராட்சி நிர்வாக ஆணையத்தின் நேரடிப் பார்வையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் குமாரபாளையத்தில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தின் அருகில் அதிக அளவு மக்கள் கூடும் இடத்தில் நம்ம டாய்லெட் கழிப்பறைகள் அமைக்கப்பட்டன. 24 மணி நேரமும் தண்ணீர் வசதியுடன் கட்டணமில்லா கழிப்பறையாக அமைக்கப்பட்ட இந்த நம்ம டாய்லெட், கடந்த ஆறு மாதங்களாக அப்படியே இருக்கிறது.

கழிப்பறைக்கான அஸ்திவாரம் அமைக்கப்பட்டு அதில் கழிப்பறைகளும் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அவை உரிய காலத்தில் மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப் படவில்லை.  இதனால் கழிப்பறையை சுற்றியும் அதிக அளவில் புல் மற்றும் செடிகள் முளைத்து புதராக காணப்படுகிறது.
 

முடங்கிக் கிடக்கும் 'நம்ம டாய்லெட்' திட்டம்!

தமிழக அரசின் கனவுத் திட்டமான இந்த நம்ம டாய்லெட் திட்டம், கைப்பிடி, எல்.இ.டி. விளக்கு, காற்றோட்டம், கை கழுவ சோப் ஆயில், வழுக்காத தரை என பல்வேறு வசதிகளுடன் நகராட்சி நிர்வாக ஆணையத்தின் நேரடிப் பார்வையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்காக ஒதுக்கப்படும் 15 லட்சம் ரூபாய் நிதி மிகவும் அதிகம். இந்த தொகையை நகராட்சியின் மூலமாக செய்தால், சுமார் 15 இருக்கைகளை கொண்ட காங்கிரீட் கட்டிடமே கட்டி விடலாம்.

இது சுகாதாரமான வசதிகளை கொண்ட திட்டம் அல்ல, அதிகாரிகளின் சுரண்டல் திட்டம் என மக்கள் கருதுகின்றனர். என்னதான் மக்களுக்கான திட்டமாக இருந்தாலும் அவை முறையாக மக்களின் பயன்பாட்டிற்காக உரிய காலத்தில் கொண்டு வரப்பட வேண்டும் என்பதுதான் மக்களின் கோரிக்கையாக உள்ளது.

செய்தி, படங்கள்:
கு.ஆனந்தராஜ் (மாணவ பத்திரிகையாளர்)