Published:Updated:

வருவாய்த்துறை அதிகாரிகளை கண்டித்து ஒப்பாரி போராட்டம்!

Vikatan Correspondent
வருவாய்த்துறை அதிகாரிகளை கண்டித்து ஒப்பாரி போராட்டம்!
வருவாய்த்துறை அதிகாரிகளை கண்டித்து ஒப்பாரி போராட்டம்!

அரியலுர்: வருவாய்த்துறையின் நடவடிக்கையை கண்டித்து அரியலுரில் பொதுமக்கள் கடைகளை அடைத்து சாலை மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரப்பரப்பு ஏற்பட்டது.

நீர் நிலைகளில் உள்ள அக்கிரமிப்புகளை அகற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து அரியலூர் தாலுகாவில் அரசு புறம்போக்கு மற்றும்  நீர்நிலை புறம்போக்குகளில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் மற்றும் வீடுளை வருவாய் துறையினர்  ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகின்றனர்
இதற்கு பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினரிடைய பலத்த எதிர்ப்பு எழுந்தது.  .

வருவாய்த்துறை அதிகாரிகளை கண்டித்து ஒப்பாரி போராட்டம்!

இந்நிலையில் குறிஞ்சான்குளம் ஏரி மற்றும் அரசுநிலையிட்டான் ஏரிகளின் கரைகளின் ஓரத்தில் கடந்த 60 வருடங்களுக்கும் மேலாக  250க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த வீடுகள் நீர்நிலைகளில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதால், வருவாய் துறையினர் வீட்டின் உரிமையாளர்களுக்கு வீடுகளை காலி செய்ய கால அவகாசம் கொடுத்து நோட்டீஸ் வழங்கினர்.

வருவாய்த்துறை அதிகாரிகளை கண்டித்து ஒப்பாரி போராட்டம்!

இந்நிலையில் கால அவகாசம் முடிந்ததையடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வருவாய் துறையினர் தயாராயினர். இதனால் அதிர்ச்சியடைந்த பாதிக்கப்பட்டோர், ஆக்கிரமிப்புகளை அகற்றும் செயலை நிறுத்தி, மீண்டும் தங்களுக்கு கால அவகாசம் தர வலியுறுத்தி  தேரடியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இவர்களுடன் மற்றும் அதிமுக, திமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சியின் நிர்வாகிகளும் கலந்துகொண்டனர். அப்போது பொதுமக்கள் ஒப்பாரி வைத்து அழுதனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலிசார் மறியலில் ஈடுபட்டிருந்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிலமணி நேரங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

-எம்.திலீபன்