Published:Updated:

சேலம் மத்திய சிறைக்குள் துப்பாக்கி வெடித்ததால் பரபரப்பு!

Vikatan Correspondent
சேலம் மத்திய சிறைக்குள் துப்பாக்கி வெடித்ததால் பரபரப்பு!
சேலம் மத்திய சிறைக்குள் துப்பாக்கி வெடித்ததால் பரபரப்பு!
சேலம் மத்திய சிறைக்குள் துப்பாக்கி வெடித்ததால் பரபரப்பு!

சேலம்: சேலம் மத்திய சிறை வளாகத்தினுள் இன்று காலை போலீஸார் வைத்திருந்த துப்பாக்கி எதிர்பாராத விதமாக வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கைதிகளை விசாரணைக்கு அழைத்து வருவதற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸார் செல்வது வழக்கம். இந்நிலையில், இன்று (12ஆம் தேதி) சேலம் மத்திய சிறையில் இருந்த கைதியை விசாரணைக்கு அழைத்து வருவதற்கு 303 ரக துப்பாக்கியுடன் முகமது அலி என்ற போலீஸ்காரர் சென்றிருக்கிறார்.

அப்போது, இன்னொரு கைதியை அழைத்துச் செல்ல வந்திருந்த காவல்துறை அதிகாரி சந்திரசேகர் என்பவரிடம் தனது துப்பாக்கியை கொடுத்துவிட்டு, முகமது அலி சிறுநீர் கழிக்கச் சென்றிருக்கிறார். அப்போது சந்திரசேகர் கையில் இருந்த துப்பாக்கி எதிர்பாராதவிதமாக வெடித்திருக்கிறது.

துப்பாக்கியில் இருந்த 4 குண்டுகள் வெடித்த நிலையில், யாருக்கும் பாதிப்பு இல்லையென்றாலும் சிறை வளாகத்தினுள் நடந்த இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
 
-எம்.புண்ணியமூர்த்தி