Published:Updated:

மதுரை குப்பைத் தொட்டியில் வெடிகுண்டுகள்: வரிச்சூர் செல்வம் சரண்!

Vikatan Correspondent
மதுரை குப்பைத் தொட்டியில் வெடிகுண்டுகள்: வரிச்சூர் செல்வம் சரண்!
மதுரை குப்பைத் தொட்டியில் வெடிகுண்டுகள்: வரிச்சூர் செல்வம் சரண்!

மதுரை: மதுரையில் குப்பை தொட்டியில் 11 நாட்டு வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்ட வழக்கில் பிரபல ரவுடி  வரிச்சூர் செல்வம் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.
 

மதுரை குப்பைத் தொட்டியில் வெடிகுண்டுகள்: வரிச்சூர் செல்வம் சரண்!

கடந்த 10ஆம் தேதி மதுரை அண்ணாநகர் குப்பை தொட்டியில் 11 நாட்டு வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது. மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

முக்கிய புள்ளிகள் மீது தாக்குதல் நடத்துவதற்கு குண்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டது. இதன் பின்னணியில் சென்னையில் பிடிபட்ட ரவுடி பிரவீனிடம் விசாரித்தில், மதுரையின் பிரபல ரவுடி வரிச்சூர் செல்வத்தின் ஏற்பாடு என்று தெரியவந்தது.
 

மதுரை குப்பைத் தொட்டியில் வெடிகுண்டுகள்: வரிச்சூர் செல்வம் சரண்!

இந்நிலையில்தான் மதுரை வெடிகுண்டு வழக்கில் தொடர்புடைய கிரிமணி என்கிற மணிமாறன் விழுப்புரம் நீதிமன்றத்தில் சரண்டடைந்தார். இதைத்தொடர்ந்து இன்று வரிச்சூர் செல்வம் மதுரை ஜே.எம். 6 நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

இந்த வழக்கின் பின்னணி குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

செ.சல்மான்

படங்கள்:
பா.காளிமுத்து, ஈ.ஜெ.நந்தகுமார்