Published:Updated:

மதுரையில் தூய்மை இந்தியா திட்டத்தை தொடங்கிய கிராம மக்கள்!

Vikatan Correspondent
மதுரையில் தூய்மை இந்தியா திட்டத்தை தொடங்கிய கிராம மக்கள்!
மதுரையில் தூய்மை இந்தியா திட்டத்தை தொடங்கிய கிராம மக்கள்!

மதுரை: பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மதுரையில் உள்ள கிராம மக்கள் பல்வேறு இடங்களை சுத்தப்படுத்தினர்.

மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், சேக்கிபட்டியில் ஸ்ரீமுத்தாலம்மன் கிராம வளர்ச்சி அறக்கட்டளை சார்பில், பிரதமர் நரேந்திரமோடி தொடங்கி வைத்த தூய்மை இந்தியா திட்டம் ஸ்ரீமுத்தாலம்மன் மந்தை திடலில் இன்று தொடங்கப்பட்டது.

மதுரையில் தூய்மை இந்தியா திட்டத்தை தொடங்கிய கிராம மக்கள்!

இதையொட்டி, பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட, தூய்மை இந்தியா திட்டம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, முத்தாலம்மன் கோயில் வளாகம் சுத்தப்படுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில், கிராம பொதுமக்கள், அறக்கட்டளை உறுப்பினர், மேலுர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

-மீ.நிவேதன்

படங்கள்: சின்னதுரை
(மாணவப் பத்திரிகையாளர்கள்)