Published:Updated:

மனோகரன் சாலை, மாறியது வேலை: புதுக்கோட்டை கலெக்டரின் பணியிடமாற்ற பின்னணி

மனோகரன் சாலை, மாறியது வேலை: புதுக்கோட்டை கலெக்டரின் பணியிடமாற்ற பின்னணி
மனோகரன் சாலை, மாறியது வேலை: புதுக்கோட்டை கலெக்டரின் பணியிடமாற்ற பின்னணி
மனோகரன் சாலை, மாறியது வேலை: புதுக்கோட்டை கலெக்டரின் பணியிடமாற்ற பின்னணி

புதுக்கோட்டை: புதுக்கோட்டைமாவட்ட ஆட்சியர் மனோகரன் திடீரென மாற்றப்பட்டிருக்கிறார். இந்த மாற்றத்திற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன.

மனோகரன் மாவட்ட ஆட்சியராக புதுக்கோட்டை வந்ததுமே அமைச்சர் சுப்ரமணியனோடு நெருக்கமானார். அதோடு தனது மகளை அமைச்சரின் மகனுக்கு திருமணம் பேசும் அளவு இந்த நட்பு வளர்ந்தது. ஆனால் ஜாதகம் பொருந்தாததால் அந்த திட்டம் கைவிடப்பட்டதாக சொல்லப்பட்டது.

இந்த நெருக்கத்தினால், மாவட்ட செயலாளர், அடுத்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் என பலம் பொருந்தியவராக விஜயபாஸ்கர் இருந்தாலும் அவரின் பேச்சுக்கு துளியும் அசைந்து கொடுக்காமல் பணியாற்றி வந்தார் கலெக்டர் மனோகரன் இருந்தார். கடந்த ஆண்டு சத்துணவு அமைப்பாளர்கள் பணி நியமனத்தின்போது கட்சியினர் சிலருக்கு பணி வழங்க ஆட்சியரிடம் விஜயபாஸ்கர் பரிந்துரைத்தார்.

ஆனால் அதையெல்லாம் சட்டை செய்யாமல் அமைச்சர் சுப்ரமணியனுக்கு முக்கியத்துவம் அளித்து பணி நியமனங்கள் செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. சமீபத்தில் புதுக்கோட்டை பேருந்து நிலையத்தை புதுப்பிக்கும் பணியிலும் ஆதாயம் பெற முயன்று கிடைக்காததால் வேண்டுமென்று பேருந்து நிலையத்தை திறக்க காலதாமதம் செய்தார் என்றும் சொல்லப்பட்டது.

மனோகரன் சாலை, மாறியது வேலை: புதுக்கோட்டை கலெக்டரின் பணியிடமாற்ற பின்னணி

இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே உள்ள ஒரு சாலைக்கு தனது பெயரை சூட்ட வேண்டும் அழுத்தம் கொடுத்ததாக அதிர்ச்சி புகார் எழுந்தது. இப்போது அந்த சாலைக்கு மனோகரன் சாலை என அவரது பெயரே சூட்டப்பட்டிருக்கிறது. மணல் தொடங்கி, மாவட்டத்தில் விடப்படும் மற்ற டென்டர்கள் வரை அத்துமீறி செயல்பட்டதால் அதிகாரிகளே மேலிடத்திற்கு புகார் அனுப்பியதாக சொல்கிறார்கள்.

மனோகரனின் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடப்பதாகவும் முதற்கட்டமாக மனோகரன் இப்போது வேறு பணிக்கு வழங்கப்படாமல் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.

-வீ.மாணிக்கவாசகம்