Published:Updated:

ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டம் வாபஸ்!

விகடன் விமர்சனக்குழு
ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டம் வாபஸ்!
ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டம் வாபஸ்!
ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டம் வாபஸ்!

ராமேஸ்வரம்: தமிழக மீனவர்களுக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டதையடுத்து, ராமேஸ்வரம் மீனவர்கள் தங்களது வேலை நிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர்.

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 5 பேருக்கு போதை பொருள் கடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் இலங்கை நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. இதையடுத்து, மீனவர்களின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் கடந்த 15 நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், மீனவர்களுக்கான தூக்கு தண்டனை இலங்கை அதிபரால் ரத்து செய்யப்படுவதாக இன்று (14ஆம் தேதி) தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ராமேஸ்வரம் மீனவர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு, நாளை முதல் மீன்பிடிக்கச் செல்ல முடிவு செய்துள்ளனர்.

இரா.மோகன்