Published:Updated:

பெண் காவலருக்காக கட்டிப்புரண்டு சண்டை போட்ட காவலர்கள்!

விகடன் விமர்சனக்குழு
பெண் காவலருக்காக கட்டிப்புரண்டு சண்டை போட்ட காவலர்கள்!
பெண் காவலருக்காக கட்டிப்புரண்டு சண்டை போட்ட காவலர்கள்!

விருதுநகர்: பெண் காவலர் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக நள்ளிரவில் இரண்டு காவலர்கள் பொது மக்கள் மத்தியில் கட்டிப்புரண்டு சண்டை போட்ட சம்பவம் விருதுநகரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மேற்கு காவல் நிலையத்தில் காவலர்களாக பணிபுரியும் மகாலட்சுமிக்கும், (பெயர் மாற்றம்). நாகராஜிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில், விருதுநகர் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ரைட்டராக பணிபுரியும் கணேஷ் என்பவருக்கும், மகாலட்சுமிக்கும் நெருங்கிய பழக்கம் ஏற்பட்டுள்ளதுது. ஒரே நேரத்தில் மகாலட்சுமி, இரண்டு பேருடன் தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

இதனிடையே, மகாலட்சுமியுடன் யார் பழகுவது என்பது தொடர்பாக இரு காவலர்களுக்கும் இடையே அடிக்கடி தகராறு நடந்து வந்துள்ளது. இந்நிலையில், மகாலட்சுமி வீட்டில் நேற்று நள்ளிரவில் ரைட்டர் கணேஷ் தங்கியுள்ளார். அப்போது திடீரென்று மகாலட்சுமியின் வீட்டுக்கு சென்ற காவலர் நாகராஜ், ரைட்டர் கணேஷ்சின் இருசக்கர வாகனம் வீட்டுக்கு முன்பு நின்றிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதனால் கடும் கோபம் அடைந்த நாகராஜ், அந்த இருசக்கர வாகனத்தை அடித்து நொறுக்கியுள்ளார். அப்போது, வீட்டில் இருந்து வெளியே வந்த கணேஷ், இது பற்றி தட்டிக்கேட்டுள்ளார். இதனால் இருவரும் கட்டிப்போட்டு சண்டை போட்டுள்ளனர். தகராறினால் ஏற்பட்ட சத்தம் கேட்டு எழுந்த அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் இது பற்றி காவ்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். விரைந்து வந்த காவலர்கள், சண்டை போட்ட இரண்டு பேரையும் அழைத்து சென்றுள்ளனர். இதைத் தொடர்ந்து நாகராஜ் இருக்கன்குடி காவல் நிலையத்துக்கும், கணேஷ் ஆயுதப்படை பிரிவுக்கும் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டனர். ஆனால் தகராறு சம்பவத்துக்கு காரணமான மகாலட்சுமி மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று உள்ளூர் காவலர்கள் அதிருப்தி அடைந்தனர்.

பெண் காவலருக்காக கட்டிப்புரண்டு சண்டை போட்ட காவலர்கள்!

இது தொடர்பாக விருதுநகர் காவல்துறை கண்காணிப்பாளர் மகேஸ்வரனை நேரில் சந்தித்து கேட்ட போது, பெண் காவலர் மகாலட்சுமி யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக நள்ளிரவில் காவலர்கள் 2 பேர் பொது மக்கள் மத்தியில் கட்டிப்புரண்டு சண்டை போட்டது மிகவும் கேவலமான விசயம். இது தொடர்பாக விருதுநகர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் சக்கரவர்த்தி விசாரணை நடத்தி வருகிறார். அதன் அடிப்படையில் பெண் காவலர் மகாலட்சுமி மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

எம்.கார்த்தி


படம்:
ஆர்.எம்.முத்துராஜ்