Published:Updated:

செல்லூர் கண்மாயில் புதிய கால்வாய் கட்டுவதற்கு மக்கள் எதிர்ப்பு!

செல்லூர் கண்மாயில் புதிய கால்வாய் கட்டுவதற்கு மக்கள் எதிர்ப்பு!
செல்லூர் கண்மாயில் புதிய கால்வாய் கட்டுவதற்கு மக்கள் எதிர்ப்பு!

மதுரை: மதுரையிலுள்ள செல்லூர் கண்மாயில் புதிய கால்வாய் கட்டுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மதுரை மாநகராட்சிக்குள் இருக்கும் செல்லூர் கண்மாய்க்குள் ஆக்கிரமப்புகளை அகற்றி தூர் வார வேண்டுமென்று பொது மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில், வைகையாற்றில் வெள்ளம் ஏற்பட்டால் அதை தடுக்கும் விதத்தில் செல்லூர் கண்மாய் மீது புதிதாக கால்வாய் கட்டுவதற்கு மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

செல்லூர் கண்மாயில் புதிய கால்வாய் கட்டுவதற்கு மக்கள் எதிர்ப்பு!

இதையடுத்து, கால்வாய் குறித்து மக்களிடம் கருத்து கேட்பு கூட்டத்தை மாவட்ட ஆட்சியர் சுப்ரமணியன் இன்று (14ஆம் தேதி) காலை நடத்தினார். இதில் பல்வேறு அரசியல் கட்சியினரும், பொதுமக்களும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். ''கண்மாயை துர்வாரினாலே போதும். மதுரை மாநகரின் குடிநீர் பஞ்சத்தை தீர்த்து விடலாம், புதிய திட்டத்தால் பயன் இல்லை, அரசுப்பனம்தான் வீணாகும்'' என்றனர்.

பல மணி நேரம் நடந்த இந்த கூட்டத்தின் முடிவில், ''மக்களின் கருத்துக்களின் அடிப்படையில் இத்திட்டம் சம்பந்தமாக ஆய்வு செய்த பின் திட்டம் துவங்கப்படும்'' என கலெக்டர் கூறினார்.

செ.சல்மான்

படம்: ஈ.ஜெ.நந்தகுமார்