Published:Updated:

சிறுகதை தொகுப்பை ஆங்கிலத்தில் வெளியிட்டு 5ஆம் வகுப்பு மாணவி சாதனை!

விகடன் விமர்சனக்குழு
சிறுகதை தொகுப்பை ஆங்கிலத்தில் வெளியிட்டு 5ஆம் வகுப்பு மாணவி சாதனை!
சிறுகதை தொகுப்பை ஆங்கிலத்தில் வெளியிட்டு 5ஆம் வகுப்பு மாணவி சாதனை!

மதுரை:  குழந்தைகள் தினம் கொண்டாடப்படும் இந்த நாளில், ஐந்தாம் வகுப்பு பயிலும் மாணவி ஒருவர் சிறுகதை தொகுப்பொன்றை ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டு சாதனை படைத்துள்ளார்.
 

சிறுகதை தொகுப்பை ஆங்கிலத்தில் வெளியிட்டு 5ஆம் வகுப்பு மாணவி சாதனை!

மதுரை டி.வி.எஸ்.பள்ளியில் ஐந்தாம் வகுப்பு பயில்கிறார் ரெப்ளின். இவர் சிறு வயதிலிருந்தே கட்டுரை, ஓவியம், ஒப்புவித்தல், அறிவியல், கணித தேர்வுகள் மட்டுமில்லாமல், பியானோ வாசித்தல், ஸ்கேட்டிங் விளையாட்டுகளிலும் கலந்து கொண்டு பல பரிசுகளை பெற்று வருகிறார்.

இவர் புதிதாக யோசித்து கதைகள் எழுதுவதை அறிந்து கொண்ட இவரது தந்தை எட்வின் அதை ஊக்கப்படுத்த 12 சிறுகதைகளை எழுதி முடித்தார். சிறு வயதிலேயே பிழையில்லா ஆங்கிலத்தில் இவர் எழுதிய சிறுகதைகளை பார்த்து பள்ளி நிர்வாகம் உற்சாகப்படுத்த அதை புத்தகமாக கொண்டு வர மதுரையிலுள்ள பதிப்பகம் ஒன்று முன் வந்தது.

இக்கதைகளை படித்து பார்க்க தமிழச்சி தங்க பாண்டியனுக்கு அனுப்பி வைத்தார் ரெப்ளின். தமிழச்சிக்கு இக்கதைகள் பிடித்துவிட புத்தகத்துக்கு அணிந்துரை எழுதினார்.

'RESTLESS BIRDS' என்று தலைப்பிடப்பட்ட இச்சிறுகதை தொகுப்பின் வெளியிட்டு நிகழ்ச்சி குழந்தைகள் தினத்துக்கு ஒருநாள் முன்பாக நேற்று மதுரையில் நடந்தது. இதில் கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டு பேசிய தமிழச்சி, "தமிழகத்தில் குழந்தைகளுக்காக பெரியவர்கள் எழுதுகிறார்கள். இதுபோல் குழந்தைகளுக்காக குழந்தைகளே புத்தகங்கள் எழுத வேண்டும். அவர்களுடைய உலகத்தை அவர்களே விளக்க வேண்டும்" என்று வாழ்த்தி பேசினார்.

பத்து வயதிலேயே ஆங்கிலத்தில் சிறுகதைகள் எழுதி தான் படித்த பள்ளி, பெற்றோருக்கும் மட்டுமில்லாமல் மதுரைக்கும், குழந்தைகள் உலகத்துக்கும் பெருமை சேர்த்துள்ளார் ரெப்ளின். ரெப்ளினை அனைவரும் பாராட்டினார்கள்.

செ.சல்மான்

படம்:
பா.காளிமுத்து