Published:Updated:

மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு!

விகடன் விமர்சனக்குழு
மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு!
மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு!
மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு!

சென்னை: தஞ்சாவூர் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. இதற்கு அக்கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சாவூர் மாவட்டக்குழு அலுவலகத்தின் மீது நேற்றிரவு 10.30 மணியளவில் விஷமிகள் சிலர் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலால் திடீரென தீப்பிழம்பு வெளிப்பட்டதை பார்த்து அலுவலகத்தில் இருந்தவர்கள் வெளியே வந்து பார்த்துள்ளனர்.

அலுவலகத்தின் கார் நிறுத்தும் இடம் மற்றும் நுழைவு வாயில் அருகில் பெட்ரோல் குண்டுகள் எரிந்த நிலையில் இருந்துள்ளன. கட்சி அலுவலகத்தின் மீது தொடுக்கப்பட்ட இந்த வன்முறைத் தாக்குதலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கண்டித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மக்களின் நலனுக்காக போராடுகிற, இயக்கம் நடத்துகிற கட்சியாகும். தஞ்சாவூரில் செம்மண் கொள்ளை, நிலம் மற்றும் பொது பயன்பாட்டு இடம் ஆக்கிரமிப்பு, சுகாதார சீர்கேடுகள், சமூக ஒடுக்குமுறைகள் மற்றும் சமூக விரோதச் செயல்கள் ஆகியவற்றை எதிர்த்து தொடர்ச்சியான இயக்கங்களை நடத்தி வருகிறது. இந்நிலையில் கட்சி அலுவலகத்தின் மீது இந்த வன்முறை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சாவூர் மாவட்டக்குழு அலுவலகத்தின் மீது தாக்குதல் தொடுத்த விஷமிகளை உடனடியாக கைது செய்து சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்று தமிழக அரசையும், காவல்துறையையும் வலியுறுத்துகிறேன்.

இதுபோன்று குண்டு வீச்சு வன்முறை சம்பவங்கள் தமிழகத்தில் நிகழா வண்ணம் இருப்பதை உறுதி செய்திட தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.