Published:Updated:

சகாயம் குழுவிற்கு தமிழக அரசு ஒத்துழைப்பு தரவேண்டும்: எஸ்டிபிஐ

விகடன் விமர்சனக்குழு
சகாயம் குழுவிற்கு தமிழக அரசு ஒத்துழைப்பு தரவேண்டும்: எஸ்டிபிஐ
சகாயம் குழுவிற்கு தமிழக அரசு ஒத்துழைப்பு தரவேண்டும்: எஸ்டிபிஐ
சகாயம் குழுவிற்கு தமிழக அரசு ஒத்துழைப்பு தரவேண்டும்: எஸ்டிபிஐ

மதுரை: சகாயம் குழுவிற்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு அளித்து கனிமவள முறைகேட்டில் ஈடுபட்டவர்களை தண்டிக்க வேண்டும் என எஸ்.டி.பி.ஐ. கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மதுரை மாவட்ட செயற்குழு கூட்டம், கட்சி அலுவலகத்தில், மாவட்ட தலைவர் ஜாபர் சுல்தான் தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் சுப்பிரமணியம் வரவேற்றார். பொதுச்செயலாளர் முஜிபர் ரஹ்மான், செயலாளர் பிலால் தீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த கூட்டத்தில், மாவட்ட செயற்குழு உறுப்பினர்களாக மேலூர் தர்ஹா சீமான் சிக்கந்தர், பின்னார் நசீர், வக்கீல் யூசுப் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். எஸ்.டி.டி.யு. தொழிலாளரணி மாவட்ட தலைவராக அப்துல் சிக்கந்தர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதில், ஆவின் பால் விலையை லிட்டருக்கு ரூ. 10 உயர்த்திய தமிழக அரசை வன்மையாக கண்டிப்பது, மின்கட்டணத்தை 30 சதவீதம் உயர்த்தி, தமிழ்நாடு மின்சார வாரியம் ஒழுங்குமுறை ஆணையம் உத்தேச மின்கட்டண அறிவிப்பை வெளியிட்டுள்ளதற்கு கண்டனம் தெரிவிப்பது, மாநில வளங்களை காக்கும் பொறுப்புடைய தமிழக அரசு, சகாயம் குழுவிற்கு முழு ஒத்துழைப்பை அளித்து, முறைகேட்டில் ஈடுபட்டவர்களை தண்டிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மீ.நிவேதன்
(மாணவப் பத்திரிகையாளர்)