Published:Updated:

சண்டையால் ஏற்பட்ட தீயை வேடிக்கை பார்த்தவருக்கு பலத்த காயம்!

விகடன் விமர்சனக்குழு
சண்டையால் ஏற்பட்ட தீயை வேடிக்கை பார்த்தவருக்கு பலத்த காயம்!
சண்டையால் ஏற்பட்ட தீயை வேடிக்கை பார்த்தவருக்கு பலத்த காயம்!

புதுச்சேரி: இருவருக்கு இடையே நடந்த சண்டையின்போது ஏற்பட்ட தீயை வேடிக்கை பார்த்தவருக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டுள்ளது.

சண்டையால் ஏற்பட்ட தீயை வேடிக்கை பார்த்தவருக்கு பலத்த காயம்!

புதுச்சேரியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் புரோக்கர்கள் சேகர் மற்றும் ஜெயராமன். இவர்களுக்குள் கொடுக்கல், வாங்கல் சம்பந்தமாக ஏற்கனவே தகராறு இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் சேகரை கொலை செய்யும் எண்ணத்தோடு, ஐந்து லிட்டர் கேனில் பெட்ரோலுடன், புதுச்சேரி, சின்னவாய்க்கால் வீதியில் முதல் மாடியிலுள்ள சேகர் அலுவலகத்திற்கு ஜெயராமன் சென்றிருக்கிறார். அப்போது, அவரது அலுவலகத்தின் மீது ஊற்றி கொளுத்தினாராம். இதில், அதிர்ஷ்டவசமாக சேகர் தப்பினார்.

மீண்டும், பெட்ரோலை சேகர் மீது ஊற்ற ஜெயராமன் முயன்றுள்ளதாக கூறப்படுகிறது. இதில் கை நழுவி மாடியில் இருந்து தீயுடன் கேன் கீழே இருந்த வாய்க்காலில் விழுந்திருக்கிறது. அப்போது ஏற்பட்ட தீயைப் பார்த்த பொதுமக்கள் வெடிகுண்டு என நினைத்து அங்கு குவிந்து விட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் தீயை அணைப்பதற்காக ஒரு கல்லை எடுத்து கேன் மீது வீசியுள்ளனர். அப்போது, கேனில் இருந்த பெட்ரோல் சிதறி அருகே நின்றிருந்த பேபி என்பவர் மீது பட்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து அவர் உடல் தீப்பற்றி எரிந்திருக்கிறது.

இதனால் பலத்த தீக்காயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து, ஜெயராமனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தி, படம்:
ஜெ.முருகன்