Published:Updated:

ரம்ஜான்: நாடு முழுவதும் உற்சாகக் கொண்டாட்டம்!

ரம்ஜான்: நாடு முழுவதும் உற்சாகக் கொண்டாட்டம்!
ரம்ஜான்: நாடு முழுவதும் உற்சாகக் கொண்டாட்டம்!

புதுடெல்லி, ஆக.31,2011

ரம்ஜான்: நாடு முழுவதும் உற்சாகக் கொண்டாட்டம்!

ஈகைத் திருநாளாம் ரம்ஜான் பெருநாள் இன்று நாடு முழுவதும் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. ##~~##

டெல்லியில் உள்ள புகழ்பெற்ற மசூதிகளில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் ஆயிரக்‍கணக்‍கானோர் பங்கேற்றனர்.  ஒருவருக்‍கொருவர் வாழ்த்து பரிமாறிக்கொண்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

ரம்ஜான் பண்டிகையை சென்​னையின் பல்வேறு இடங்களில் இஸ்லாமியர்கள் உற்சாகத்துடன் கொண்டாடினர்.​

சென்னைத் தீவுத்திடலில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் ஆயிரக்‍கணக்‍கானோர் பங்கேற்றனர்.  ஒருவரையருவர் ஆரத்தழுவி வாழ்த்துகளையும் இனிப்புகளையும் பரிமாறிக்‍கொண்டனர். சென்னை - திருவல்லிக்‍கேணி பெரிய மசூதியில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

கோவையில் பெரிய பள்ளிவாசல், அஷ்லே சுன்னத் ஜமாத் பள்ளிவாசல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சிறப்பு தொழுகைகள் நடைபெற்றன.

இதேபோல் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் நடைபெற்ற ரம்ஜான் சிறப்பு தொழுகையில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

அடுத்த கட்டுரைக்கு