Published:Updated:

நவீனவகை செயற்கை கை, கால்களுக்கு விண்ணப்பிக்கலாம்

Vikatan Correspondent
நவீனவகை செயற்கை கை, கால்களுக்கு விண்ணப்பிக்கலாம்
நவீனவகை செயற்கை கை, கால்களுக்கு விண்ணப்பிக்கலாம்
நவீனவகை செயற்கை கை, கால்களுக்கு விண்ணப்பிக்கலாம்

சென்னை, செப்.1-:2011: கல்வி பயிலும், பணிபுரியும், சுயதொழில் புரியும் மாற்றுத்திறனாளிகள் நவீனவகை செயற்கை கை, கால்கள் கோரி விண்ணப்பிக்கலாம் என்று அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது;-

முட்டிக்கு கீழ் கைகளை இழந்த, முட்டிக்கு கீழ் மற்றும் மேல் கால்களை இழந்த நிலையில் கல்வி பயிலும் மாற்றுத் திறனாளிகளுக்கு, நவீனவகை செயற்கை அவயங்கள் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகங்கள் மூலம் ஒவ்வொரு மாவட்டத்திலும் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. நவீனவகை செயற்கை அவயங்கள் தேவைப்படும் மாணவ, மாணவிகள், மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை நகல், பள்ளி, கல்லூரி முதல்வரிடம் இருந்து சான்று பெற்று, அந்தந்த மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலருக்கு உடனடியாக நேரில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும், முட்டிக்கு கீழ் கால் இழந்த நிலையில் பணிபுரியும், சுயதொழில் புரியும் மாற்றுத்திறனாளிகளுக்கும் நவீனவகை செயற்கை கால்கள் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகங்கள் மூலம் இலவசமாக வழங்கப்படுகிறது. இவர்கள் நவீன செயற்கை கால்கள் பெற விண்ணப்பத்துடன் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை நகல் மற்றும் பணிபுரியும் நிறுவனத்தில் இருந்து சான்று பெற்று தாங்கள் வசிக்கும், கல்வி பயிலும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலருக்கு உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.