Published:Updated:

மாமல்லபுரம் நாட்டிய விழா: பரவசத்தில் பார்வையாளர்கள்

மாமல்லபுரம் நாட்டிய விழா: பரவசத்தில் பார்வையாளர்கள்
மாமல்லபுரம் நாட்டிய விழா: பரவசத்தில் பார்வையாளர்கள்

காஞ்சிபுரம்: மாமல்லபுரத்தில் இந்திய சுற்றுலாத் துறை சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்திய நாட்டிய விழா இந்த ஆண்டு பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்து வருகிறது.

மாமல்லபுரம் நாட்டிய விழா: பரவசத்தில் பார்வையாளர்கள்

மார்கழி தொடங்கிவிட்டாலே இசை மற்றும் நாட்டியக் கலைஞர்களின் கச்சேரி முக்கிய நகரங்களில் களைகட்டத் துவங்கிவிடும். நுழைவுக் கட்டணம், முன்பதிவு போன்றவை அவசியம் என்பதால் நடுத்தர மற்றும் ஏழைக் குடும்பங்கள் அவற்றை காண்பது அரிது. அது போல் நமது உள்ளூர் கலைஞர்களின் கிராமிய நடனங்கள் பெரும்பாலும் அங்கே நடப்பதில்லை.

மாமல்லபுரம் நாட்டிய விழா: பரவசத்தில் பார்வையாளர்கள்

ஆனால் வருடந்தோறும் மாமல்லபுரத்தில் நடக்கும் இந்திய நாட்டியவிழா, உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பயணிகளை மகிழ்வித்து வருகின்றது.

மாமல்லபுரம் நாட்டிய விழா: பரவசத்தில் பார்வையாளர்கள்

இந்திய சுற்றுலாத் துறை சார்பில் நடத்தப்படும் இந்திய நாட்டிய விழா, ஆண்டுதோறும் மாமல்லபுரத்தில் ஒரு மாத காலத்திற்கு நடக்கும். இந்த ஆண்டுக்கான விழா கடந்த டிசம்பர் 21 ந்தேதி அன்று தொடங்கியதை யடுத்து தினந்தோறும் பார்வையாளர்கள் விழாவினை கண்டுகளித்து வருகின்றனர்.

மாமல்லபுரம் நாட்டிய விழா: பரவசத்தில் பார்வையாளர்கள்

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் பாரம்பரியமான இந்திய நடனங்களை ஆர்வத்துடன் கண்டு களிக் கின்றனர்.

- பா.ஜெயவேல்