Published:Updated:

41–வது நினைவு நாள்: பெரியார் சிலைக்கு தலைவர்கள் மரியாதை!

விகடன் விமர்சனக்குழு
41–வது நினைவு நாள்: பெரியார் சிலைக்கு தலைவர்கள் மரியாதை!
41–வது நினைவு நாள்: பெரியார் சிலைக்கு தலைவர்கள் மரியாதை!

சென்னை: தந்தை பெரியாரின் 41–வது நினைவு நாளையொட்டி, சென்னை அண்ணா சாலை சிம்சன் அருகே உள்ள அவரது திருஉருவ சிலைக்கு திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி, தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

41–வது நினைவு நாள்: பெரியார் சிலைக்கு தலைவர்கள் மரியாதை!

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக பெரியார் திடலுக்கு வந்து நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். இதில் கலிபூங்குன்றன் உள்பட ஏராளமான பேர் பங்கேற்றனர்.

தந்தை பெரியார் திராவிடர் கழகம் ஆனூர் ஜெகதீசன், திராவிடர் விடுதலை கழகம் விடுதலை ராஜேந்திரன் ஆகியோரும் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் உடன் முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி, சற்குணபாண்டியன், ரகுமான்கான், ஆ.ராசா, அமைப்பு செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன், சட்டத்துறை செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ. உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கட்சி தலைமைகழகமான தாயகத்தில் உள்ள பெரியாரின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் கட்சி நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தார். அவருடன் இரா. செல்வம், வெற்றிச்செல்வன், பாவலன் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.