Published:Updated:

எம்ஜிஆர் பிறந்தநாள்: அ.தி.மு.க.வினர் கொண்டாட்டம்!

Vikatan Correspondent
எம்ஜிஆர் பிறந்தநாள்: அ.தி.மு.க.வினர் கொண்டாட்டம்!
எம்ஜிஆர் பிறந்தநாள்: அ.தி.மு.க.வினர் கொண்டாட்டம்!

சென்னை: அதிமுக நிறுவனரும், தமிழக முன்னாள் முதலைமச்சரும், நடிகருமான எம்.ஜி.ஆரின் 98வது பிறந்தநாள் இன்று தமிழகம் மட்டுமின்றி தமிழர்கள் உள்ள இடங்களில் சிறப்பாக கொண்ட்டாடப்பட்டு வருகிறது.
 

எம்ஜிஆர் பிறந்தநாள்: அ.தி.மு.க.வினர் கொண்டாட்டம்!

சென்னையின் புறநகர் பகுதியான கிழக்கு கடற்கரைச் சாலையிலும் எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகின்றன.

வழக்கு விவகாரங்களில் ஜாமீனில் விடுதலையான பின்னர் எவ்வித பொது நிகழ்ச்சிகளுக்கும், தனது கட்சியின் நிகழ்ச்சிகளிலும் தலைகாட்டாமல் இருந்தார். கட்சியின் நிறுவனர் பிறந்தநாளையொட்டி அவர் தனது இல்லத்தில் வைத்து எம்.ஜி.ஆரின் உருவச்சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
ஜெயலலிதா எவ்வித நிகழ்ச்சிகளிலும் பங்கெடுக்காமல் இருந்ததால் சோர்ந்திருந்த அ.தி.மு.க.வினர், எம்.ஜி.ஆரின் பிறந்தநாளை கொண்டாடியதால் கூடுதல் மகிழ்ச்சியாக, எம்.ஜி.ஆர். பிறந்தநாளைக் கொண்டாடினர்.

இனிப்பு வழங்கியும், வேட்டை சேலைகள் கொடுத்தும், அன்னதானம் செய்தும், ஆலயங்களில் சிறப்பு அபிஷேகம் செய்தும் பிறந்தநாள் நிகழ்ச்சிகளைக் கொண்டாடினர்.
 

எம்ஜிஆர் பிறந்தநாள்: அ.தி.மு.க.வினர் கொண்டாட்டம்!

சென்னைமாநகராட்சிக்குள்பட்ட 192-வது வார்டில் மாமன்ற உறுப்பினரும், மாநகராட்சியின் கணக்கு தணிக்கை நிலைக்குழு தலைவருமான எம்.சி.முனுசாமி தலைமையில் நடந்த விழாவில் எம்.ஜி.ஆர். புகைப்படத்துக்கு தீபாராதனை காட்டப்பட்டு, மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் நூற்றுக்கும் மேற்பட்ட ஏழைப் பெண்களுக்கு இலவச சேலைகளை வழங்கினார்.

இதே போல் கொட்டிவாக்கம் பகுதியில் நடைபெற்ற விழாவில் கொட்டிவாக்கம் ஊராட்சி கழக செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, குப்பன் ஆகியோர் தலைமையில் அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டு எம்.ஜி.ஆருக்கு அஞ்சலி செலுத்தினர். மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு சைவ பிரியாணி அளிக்கப்பட்டது. மேலும் பஸ்களில் சென்றோருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

இதே போல், பாலவாக்கம், ஈஞ்சம்பாக்கம், மேட்டுக்குப்பம் பகுதிகளிலும் எம்.ஜி.ஆர். பிறந்தநாள்விழா கொண்டாடப்பட்டது.

- எம்.செய்யது