Published:Updated:

சென்னையில் நடந்த கலகல பொங்கல் விழா!

Vikatan Correspondent
சென்னையில் நடந்த கலகல பொங்கல் விழா!
சென்னையில் நடந்த கலகல பொங்கல் விழா!

சென்னை: கரும்பு தின்ன கூலியா என்பார்கள். அதைப் போல கரும்பைத் தின்ன வைத்து அதற்கு பரிசும் தந்து மகிழ்ந்திருக்கிறார்கள் திருவான்மியூர் குடியிருப்போர் நலச்சங்கத்தினர்.
 

சென்னையில் நடந்த கலகல பொங்கல் விழா!

சென்னை அடுத்த திருவான்மியூரில் கிழக்கு காமராஜ் நகரில்  அரசுதொலைக்காட்சிகளிலும், வானொலியிலும் பணி செய்வோர், ஓய்வு பெற்றோர் மற்றும் அரசுத் துறைகளில் பணி செய்வோர் குடியிருந்து வருகின்றனர். இவர்கள் ஒன்றிணைந்து கிழக்கு காமராஜ் நகர் குடியிருப்போர் சங்கத்தை செயல்படுத்தி வருகின்றனர்.

பொங்கல்பண்டிகையின் மறுநாளில் இச்சங்கத்தின் சார்பில் குடியிருப்போர்களுக்காக பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட்டது. முன்னதாக, திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு திருவள்ளுவரின் புகைபடத்தை, அங்குள்ள தெருவீதிகளில் ஊர்வலமாகக் கொண்டு வந்தனர். சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தைச் சார்ந்த தமிழிசை கல்லூரியின் நாதஸ்வர கலைஞர்களின் ஊர்வலத்தில் நாதஸ்வரம் வாசித்தும், தவில் முழங்கியும் வந்தனர்.
 

சென்னையில் நடந்த கலகல பொங்கல் விழா!

ஊர்வலம் எம்.எஸ்.கோபால் முனையத்தில் நிறைவு பெற்று திருவள்ளுவர் படம் வைக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்டது. வள்ளுவரின் புகழ் குறித்து பேராசியர் கே.கஸ்தூரி, முனைவர் வெ.நல்லதம்பி, வாசுதேவன் ஆகியோர் உரையாற்றினர். முதிர்ந்த வயதுடைய தம்பதி ஜே.கே.வி.பால்- பாரதி ஆகியோருக்கு மரியாதை செய்யப்பட்டது.

பின்னர் குடியிருப்போருக்கான கலை மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. முன்னதாக பொங்கல் தினத்தில் சிறந்த முறையில் வீட்டின் முன் கோலமிட்டிருந்தவர்களில், தேவகி மற்றும் சுபா, ரேவதி வேணுகோபால், பாமா தமிழ்வாணன் ஆகியோரை மலேசியாவைச் சேர்ந்த டாக்டர் கீதா தத்தாத்ரி தேர்வு செய்து பரிசு வழங்கப்பட்டது.
 

சென்னையில் நடந்த கலகல பொங்கல் விழா!

இதைத் தொடர்ந்து ஓவியப்போட்டி, ஓட்டப்பந்தயம், வேகமாக நடப்பது, திருக்குறள் ஒப்புவித்தல், கயிறு இழுத்தல், இசை நாற்காலி, உறியடித்தல், செங்கல்நடை, பாட்டுப்போட்டி என்று நடத்தப்பட்டது. முத்தாய்ப்பாக கரும்பு தின்னும் போட்டியில் சிறுவர், சிறுமியர் ஆரவாரமாகக் கலந்து கொண்டு கரும்புகளை கடித்து துப்பினர்.
 

சென்னையில் நடந்த கலகல பொங்கல் விழா!

போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும், கலந்து கொண்டவர்களுக்கு ஆறுதல் பரிசுகளும் தரப்பட்டது. விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு நந்தினி கிரி, தேவகி கிருஷ்ணா, சுதந்திரதேவி செல்வன் ஆகியோர் வெண்பொங்கல், சர்க்கரைப் பொங்கல் தேநீர் வழங்கினர்.

நிகழ்ச்சியினை நாகராஜன், எம்.மகேந்திரன், சிவக்குமார், எல்.தமிழ்வாணன், தமிழ்செல்வி நடத்திக் கொடுத்தனர். மருத்துவக்கல்லூரி மாணவி கீர்த்தனா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியும், தொழிலதிபர் சி.வி.ராமகிருஷ்ணனும் நிகழ்ச்சி ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

- எம்.செய்யது