Published:Updated:

வள்ளுவர் சிலையை வடித்த ஆயுள் கைதி!

Vikatan Correspondent
வள்ளுவர் சிலையை வடித்த ஆயுள் கைதி!
வள்ளுவர் சிலையை வடித்த ஆயுள் கைதி!
வள்ளுவர் சிலையை வடித்த ஆயுள் கைதி!

கடலூர்: கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆயுள் கைதி ஒருவர் திருவள்ளுவர் சிலையை வடிமைத்து ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

கடலூர் மத்திய சிறையில் குரு.கலைக்கண்ணன் என்பவர் ஆயுள் கைதியாக அடைக்கப்பட்டுள்ளார். இவர் தனது கையால் திருவள்ளுவர் சிலையை அருமையாக வடிவமைத்துள்ளார்.

இந்த திருவள்ளுவர் சிலையை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வெ.ராமசுப்பிரமணியன் இன்று திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் வேலூர் சரக சிறைத்துறை துணை கண்காணிப்பாளர் வ.ஹூ.முகமது ஹனீபா, சிறைத்துறை கண்காணிப்பாளர் ஆ.முருகேசன், கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆ.ராதிகா ஆகியோர் பங்கேற்றனர்.