Published:Updated:

பரமக்குடி: புதிய தமிழகம், கம்யூ. கட்சிகள் வெளிநடப்பு

பரமக்குடி: புதிய தமிழகம், கம்யூ. கட்சிகள் வெளிநடப்பு
பரமக்குடி: புதிய தமிழகம், கம்யூ. கட்சிகள் வெளிநடப்பு

பரமக்குடி: புதிய தமிழகம், கம்யூ. கட்சிகள் வெளிநடப்பு

சென்னை, செப்.14,2011

பரமக்குடி: புதிய தமிழகம், கம்யூ. கட்சிகள் வெளிநடப்பு

பரமக்குடி கலவரம் தொடர்பாக பேச வாய்ப்பு வழங்கப்படாததால், புதிய தமிழகம் இடதுசாரி கட்சிகள் மற்றும் பாமக ஆகிய நான்கு கட்சிகள்  வெளிநடப்பு செய்தன. ##~~##

சட்டப்பேரவை இன்று தொடங்கியதும் புதிய தமிழகம் கட்சி உறுப்பினர் கிருஷ்ணசாமி எழுந்து பரமக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூடு தொடர்பாக பேச முயன்றார்.

அதற்கு அனுமதி மறுத்த சபாநாயகர் ஜெயக்குமார், "இன்றைக்கு நிறைய மசோதாக்கள் மற்றும் விவாதங்கள் நடத்தபட வேண்டியிருப்பதால் அனுமதிக்க முடியாதும்," என்றார்.

இதைத் தொடர்ந்து கிருஷ்ணசாமி சில விஷயங்களைப் பேசினார். அந்தப் பேச்சு, அவை குறிப்பேட்டிலிருந்து நீக்கப்பட்டது.

பின்னர், பேச மறுப்பு தெரிவித்ததைக் கண்டித்து கிருஷ்ணசாமி அவையில் இருந்து வெளிநடப்பு செய்தார்.

இதே விவகாரத்தைப் பற்றி பேச மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், பாமக ஆகிய கட்சிகளும் முயன்றனர். அதற்கு அனுமதி மறுக்கப்பட, அவர்களும் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

அடுத்த கட்டுரைக்கு