Published:Updated:

பரமக்குடி கலவரம்: ஓய்வுபெற்ற நீதிபதி சம்பத் விசாரணை

பரமக்குடி கலவரம்: ஓய்வுபெற்ற நீதிபதி சம்பத் விசாரணை

சென்னை, செப்.13,2011

பரமக்குடி கலவரம் தொடர்பான விசாரணை கமிஷன் நீதிபதியாக சென்னை உயர்நீதி மன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி கே.சம்பத் நியமிக்கப்பட்டார். ##~~##

பரமக்குடியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த கலவரத்தில் காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 7 பேர் கொல்லப்பட்டனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி கொண்டு விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

அதன்படி, இந்த விசாரணை கமிஷன் நீதிபதியாக சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி கே.சம்பத் நியமிக்கப்பட்டார்.

கடந்த 14-ம் தேதி பரமகுடியில் நடந்த சட்டம் ஒழுங்கு தொடர்பான விவகாரத்தை இந்த விசாரணை ஆணையம் விசாரிக்கும்.

சம்பவம் நடப்பதற்கான காரணங்கள், போலீஸ் நடத்திய துப்பாக்கிச் சூடு நியாயமானதுதானா என்பதையும், இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடக்காத அளவுக்கு பரிந்துரைகளையும் வழங்குமாறு விசாரண அணையத்திடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு