Published:Updated:

தமிழக எம்.எல்.ஏ. ஊதியம் ரூ.55,000 ஆக உயர்வு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
தமிழக எம்.எல்.ஏ. ஊதியம் ரூ.55,000 ஆக உயர்வு
தமிழக எம்.எல்.ஏ. ஊதியம் ரூ.55,000 ஆக உயர்வு

தமிழக எம்.எல்.ஏ. ஊதியம் ரூ.55,000 ஆக உயர்வு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சென்னை, செப்.13,2011

தமிழக எம்.எல்.ஏ. ஊதியம் ரூ.55,000 ஆக உயர்வு

தமிழக சட்டப்பேரவை உறுப்பினரின் ஊதியம் ரூ.55,000 ஆக உயர்த்தப்படுகிறது. ##~~##

சட்டப்பேரவை தொடர்பான மானிய கோரிக்கை மீதான விவாதத்தின்போது, முதல்வர் ஜெயலலிதா அறிவிக்கை ஒன்றை வெளியிட்டார்.

அதில், "எம்.எல்.ஏ.க்களின் கோரிக்கை அடிப்படையில் அவர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் தொகுதிபடி 5 ஆயிரம் ரூபாயிலிருந்து 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தபடும். இதன் மூலம் எம்.எல்.ஏ.க்களின் மொத்த மாதம் சம்பளம் மற்றும் படி ஆகியவை 50 ஆயிரம் ரூபாயில் இருந்து 55 ஆயிரம் ரூபாயாக உயரும்.

அமைச்சர், சபாநாயகர், துணை சபாநாயகர், எதிர்கட்சித் தலைவர், அரசு கொரடா ஆகியோருக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் தொகுதிபடி 5 ஆயிரம் ரூபாயிலிருந்து 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தபடும்.

இதன் மூலம் அமைச்சர்கள், சபாநாயகர் ஆகியோரின் மொத்த மாத சம்பளம் மற்றும் படிகள் 27 ஆயிரம் ரூபாயிலிருந்து 32 ஆயிரம் ரூபாயாக உயரும். துணை சபாநாயகர், எதிர்கட்சித் தலைவர், அரசு கொரடா ஆகியோருக்கான மொத்த மாத சம்பளம் மற்றும் படிகள் 26,500 ரூபாயிலிருந்து 31,500 ரூபாயாக உயரும்.

இந்த உயர்வின் மூலம் அரசுக்கு ஆண்டு ஒன்றுக்கு 1.41 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும்.
இதே போல் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்களுக்கான மாத ஓய்வு ஊதியம் 10 ஆயிரம் ரூபாயிலிருந்து 12 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும்.

இதன் மூலம் அரசுக்கு 2 கோடியே 40 லட்சம் ரூபாய் கூடுதல் செலவு ஆகும் என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு