Published:Updated:

அப்சலுக்கு கருணை: காஷ்மீர் பேரவையில் அமளி!

அப்சலுக்கு கருணை: காஷ்மீர் பேரவையில் அமளி!
அப்சலுக்கு கருணை: காஷ்மீர் பேரவையில் அமளி!

அப்சலுக்கு கருணை: காஷ்மீர் பேரவையில் அமளி!

ஸ்ரீநகர், செப்.28,2011

அப்சலுக்கு கருணை: காஷ்மீர் பேரவையில் அமளி!

அப்சல் குருவுக்கு கருணை வழங்கக் கோரும் தீர்மானம் தொடர்பான விவகாரத்தால் ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையில் கடும் அமளி ஏற்பட்டது. 

நாடாளுமன்றத்தின் மீது கடந்த 2001-ம் ஆண்டு தாக்குதல் நடத்திய குற்றத்துக்காக தீவிரவாதி அப்சல் குருவுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர் ஷேக் அப்துல் ரஷீத் என்பவர், அப்சல் குருவுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை கருணை அடிப்படையில் குறைக்கக் கோரும் தீர்மானத்தை நிறைவேற்றும்படி, சபாநாயகரிடம் கடந்த 2-ம் தேதி மனு தாக்கல் செய்தார்.

இந்த நிலையில், ஜம்மு - காஷ்மீர் சட்டப்பேரவை இன்று கூடியதும், இந்தத் தீர்மானத்தின் மீது விவாதம் நடத்தி வாக்கெடுப்பு நடத்தப்பட இருந்தது.

ஆனால், இந்தத் தீர்மானத்துக்கு பாரதிய ஜனதா உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அவர்களுடன், காங்கிரஸ் உறுப்பினர்களும் அவையின் மையப் பகுதிக்கு சென்று தீர்மானத்தை நிறைவேற்ற எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால், பெரும் கூச்சல் குழப்பம் நிலவியதால், சட்டப்பேரவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டது.

பின்னர், இந்தத் தீர்மானம் ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார்.

அண்மையில், ராஜீவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட மூவரின் கருணை மனுவை ஜனாதிபதி மீண்டும் பரிசீலிக்க வேண்டும் என தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக, அப்சல் குருவுக்கு கருணை காட்ட கோரும் தீர்மானம், ஜம்மு - காஷ்மீர் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு