Published:Updated:

அருணாச்சல பிரதேச முதல்வர் பதவி விலகல்

விகடன் விமர்சனக்குழு
அருணாச்சல பிரதேச முதல்வர் பதவி விலகல்
அருணாச்சல பிரதேச முதல்வர் பதவி விலகல்

இடாநகர், அக்.29,2011

அருணாச்சல பிரதேச முதல்வர் பதவி விலகல்

அருணாச்சால பிரதேச மாநில முதல்வர் ஜர்பாம் கேம்ளின் தமது பதவியை இன்று ராஜினாமா செய்தார்.

தமது அமைச்சரவையில் உள்ள மூத்த அமைச்சரையே கடத்த திட்டமிட்டதாக குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து அவர் இந்த முடிவை எடுத்தார்.

ஜர்பாம் தனது ராஜினாமா கடிதத்தை, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு அனுப்பிவைத்துள்ளார்.

அருணாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர்கள் கடந்த வாரம் சோனியா காந்தியை சந்தித்து மாநில முதல்வர் கேம்ளினை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.

மூத்த அமைச்சரான சவ்மா மெய்ன்ஐ துப்பாக்கி முனையில் கடத்தும்படி முதல்வர் கூறியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, மாநில காங்கிரஸ் தலைவரின் கோரிக்கையை ஏற்று கேம்ளினை பதவியை ராஜினாமா செய்யுமாறு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா உத்தரவிட்டதாக தெரிகிறது.