Published:Updated:

எங்களுக்கு மக்கள் வரிப்பணம் வேண்டாம்: மல்லையா

எங்களுக்கு மக்கள் வரிப்பணம் வேண்டாம்: மல்லையா
எங்களுக்கு மக்கள் வரிப்பணம் வேண்டாம்: மல்லையா
எங்களுக்கு மக்கள் வரிப்பணம் வேண்டாம்: மல்லையா

மும்பை: தமது நிறுவனத்துக்கு மக்களின் வரிப்பணம் தேவையில்லை என்று கிங்பிஷர் ஏர்லைன்ஸ் தலைவர் விஜய் மல்லையா உறுதிபட தெரிவித்தார்.

மேலும், அரசிடம் இருந்து நிதியுதவியை தாம் கோரவில்லை என்றும் அவர் விளக்கம் அளித்தார்.

கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில், அரசிடம் உதவி கோரியதாக தகவல்கள் வெளியானது. மேலும், அந்நிறுவனம் மூடப்படலாம் என்றும் கூறப்பட்டது.

ஆனால், இவ்விரு தகவல்களையும் மறுத்த கிங்பிஷர் தலைவர் விஜய் மல்லையா, "அரசிடம் இருந்து நாங்கள் உதவி கோரவில்லை. மக்களின் வரிப் பணத்தை கேட்கமாட்டோம். ஒருபோதும் அப்படி செய்ய மாட்டோம்.

எங்கள் நிதி நெருக்கடி தொடர்பாக வங்கிகளிடம் தொடர்ந்து பேச்சு நடத்தி வருகிறோம். நாங்கள் சலுகை கேட்கவில்லை. இப்போதைக்கு குறுகிய கால கடனும், வட்டியில் மானியமும் தேவை என்பதே எங்களது கோரிக்கை.

தற்போதைய நிதி நெருக்கடியை சமாளித்து, நிறுவனத்தை நடத்துவதற்கு ரூ.700 கோடியில் இருந்து ரூ.800 கோடி வரை கடன் உதவி கேட்டுள்ளோம்," என்றார் விஜய் மல்லையா.