Published:Updated:

பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராக ஐகோர்ட்டில் வழக்கு!

பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராக ஐகோர்ட்டில் வழக்கு!
பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராக ஐகோர்ட்டில் வழக்கு!

பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராக ஐகோர்ட்டில் வழக்கு!

பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராக ஐகோர்ட்டில் வழக்கு!

சென்னை: தமிழகத்தில் பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மூத்த சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி தாக்கல் செய்த பொது நல மனு மீது செவ்வாய்க்கிழமை விசாரணை நடைபெறுகிறது.

டிராஃபிக் ராமசாமி தாக்கல் செய்த மனுவுக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் தர்மராவ், சுப்பையா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் அனுமதி அளித்தது.

மேலும், இந்த மனு மீதான விசாரணை, செவ்வாய்க்கிழமை நடைபெறும் என்றும் நீதிபதிகள் அறிவித்தனர்.

மூத்த சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி தாக்கல் செய்த பொது நல மனுவில், 'தமிழகத்தில் பஸ் கட்டணங்களை உயர்த்தி கடந்த 16-ம் தேதி அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதற்கு சில சட்ட நடைமுறைகளை அரசு பின்பற்றவில்லை. 30 முதல் 50 சதவீதம் பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 70 சதவீத மக்கள் கிராமப்புறங்களில் வசிக்கின்றனர். இவர்களின் வருமானம் மிகவும் குறைவு. இந்த கட்டண உயர்வால் 30 சதவீத மாணவர்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

பஸ் கட்டண உயர்வு குறித்த முடிவை எடுப்பதற்கு முன்பு மோட்டார் வாகன சட்டப்படி பயணிகளுக்கு முன்னறிவிப்பு செய்திருக்க வேண்டும். ஒவ்வொரு `ஸ்டேஜுக்கும் திருத்தப்பட்ட கட்டணம் எவ்வளவு என்பதை பிரபல பத்திரிகைகளில் வெளியிட வேண்டும்.

இந்த நடைமுறையை அரசு செய்யவில்லை. இதனால் 18-ம் தேதி காலையில் பயணிகளிடமும், 'பாஸ்' வைத்திருந்தவர்களிடமும் பஸ் நடத்துனர்கள் கூடுதல் கட்டணம் கேட்டனர்.

உதாரணமாக, குறிப்பிட்ட நாட்களுக்காக ரூ.600-க்கு வாங்கி வைத்திருந்த பாஸ்சுக்கு கூடுதலாக ரூ.400 தொகையை செலுத்த பயணிகள் வற்புறுத்தப்பட்டனர். இதனால் குழப்பம் நேரிட்டது. நடத்துனர்களுடன் பலர் சண்டையிட்டனர்.

கடந்த 5 ஆண்டுகளாக உயர்த்தப்படாத பஸ் கட்டணத்தை நஷ்டத்தை காரணம் காட்டி, திடீரென்று முடிவு செய்து, எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் உயர்த்தியது சட்டவிரோதமானது. அரசின் கொள்கை முடிவு என்றாலும், அதை அதற்கான சட்டங்களை பின்பற்றியே எடுக்க வேண்டும்.

பஸ் பாஸ் தேவையில்லாத பணக்கார மாணவர்களுக்கும், இலவச பாஸ்கள் கொடுத்ததும் போக்குவரத்து கழகங்கள் பெருத்த நஷ்டம் அடைந்ததற்கு முக்கிய காரணமாக உள்ளது. எந்த ஒரு அரசு பஸ்சும் காப்பீடு செய்யப்படுவதில்லை. இதனால் விபத்தில் பாதிக்கப்படும் மக்களுக்கு நஷ்டஈடு வழங்கியும் நஷ்டம் அடைகிறது.

இதுபற்றி அரசு அதிகாரிகளுக்கு 18 மற்றும் 19-ம் தேதி மனு அனுப்பினேன். பஸ் கட்டண உயர்வை உடனே திரும்பப் பெறவேண்டும் என்று கோரினேன். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மக்கள் சேவைக்காகத்தான் பஸ்களை இயக்க வேண்டுமே தவிர, லாபத்துக்காக இயக்கக்கூடாது.

எனவே அரசால் அறிவிக்கப்பட்ட பஸ் கட்டண உயர்வை நிறுத்தி வைத்து உத்தரவிட வேண்டும்,' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு