Published:Updated:

தானே புயல் நிவாரண திட்டத்துக்கு நிதி அளித்தோர் பட்டியல்

தானே புயல் நிவாரண திட்டத்துக்கு நிதி அளித்தோர் பட்டியல்

அன்புமிக்க வாசக பெருமக்களே...

’தானே’ புயல் நிவாரண திட்டத்துக்காக விகடன் குழுமம் விறுவிறுப்பாக களப் பணியாற்றி வருவதை, விகடன் குழும இதழ்கள் வாயிலாகவும், நமது விகடன் வலை தளம் வாயிலாகவும் உங்களுக்கு தொடர்ந்து தெரிவித்து வருகிறோம். விகடனோடு கைகோர்த்து இந்த நிவாரணப் பணிகளுக்கு வாகசர்களாகிய நீங்கள் உலகம் முழுவதிலும் இருந்து தொடர்ந்து நிதி உதவி அளித்து வருகிறீர்கள்.

18.01.2013-ம் தேதி நிலவரப்படி உங்களிடமிருந்து எங்களுக்கு வந்திருக்கும் மொத்த நிதி - ரூ. 1,35,71,288

இதில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளிலிருந்து ஆன்லைன்/ஆர்.டி.ஜி.எஸ். மூலம் வங்கிக் கணக்கில் நிதியை அனுப்பிய வாசகர்களில் இன்னும் பலர் தங்கள் விவரங்களை அளிக்கவில்லை. அவ்வாறு பெயர், விவரம் பெறப்படாத வாசகர்களிடம் இருந்து வந்த தொகை - ரூ. 18,06,077

மேற்கண்ட வாசகர்கள், உடனடியாக தங்கள் தொடர்பான விவரத்தை கீழே அளித்துள்ள படிவத்தில் நிரப்பி தபால் மூலமோ அல்லது thane@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அனுப்பி வைக்க வேண்டுகிறோம். இதற்கான ரசீதை எங்களிடமிருந்து பெற்று, 2011 - 2012 நிதி ஆண்டுக்கான வருமான வரி விலக்கையும் இதன்மூலம் தாங்கள் பெறமுடியும் என்பதை நினைவூட்டுகிறோம்.

தானே புயல் நிவாரண திட்டத்துக்கு நிதி அளித்தோர் பட்டியல்

இந்த வாசகர்களில் சிலர், கீழ்கண்ட பட்டியலில் தங்கள் பெயர் விவரங்கள் இன்னும் இடம் பெறாதது குறித்து மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி மூலம் விசாரித்து வருகிறீர்கள். வங்கியிலிருந்து விவரம் பெற்றதும் - அல்லது நிதி அனுப்பிய வாசகர்கள் தங்களைப் பற்றிய விவரங்களை தெரிவித்ததும் - அவர்களுடைய பெயர் மற்றும் ஊர் விவரங்களும் கீழ்கண்ட பட்டியலில் இடம் பெறும் என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

அதுவரை, நிர்வாக ரீதியான - தவிர்க்க இயலாத இந்த தாமதத்தைப் பொறுத்தருள வேண்டுகிறோம்.

முழுமையான விவரங்கள் பெறப்பட்ட 1,17,65,211 ரூபாய்க்கான பட்டியல் விவரம்:

தானே புயல் நிவாரண திட்டத்துக்கு நிதி அளித்தோர் பட்டியல்

18.01.2013 வரை நிதி அளித்தோர் பட்டியலை காண...

அடுத்த கட்டுரைக்கு