Published:Updated:

மார்ச் 15-ல் 'கூடங்குளம் சலோ': டெல்லியில் அணு உலை எதிர்ப்பாளர்கள் அறிவிப்பு

மார்ச் 15-ல் 'கூடங்குளம் சலோ': டெல்லியில் அணு உலை எதிர்ப்பாளர்கள் அறிவிப்பு
மார்ச் 15-ல் 'கூடங்குளம் சலோ': டெல்லியில் அணு உலை எதிர்ப்பாளர்கள் அறிவிப்பு
மார்ச் 15-ல் 'கூடங்குளம் சலோ': டெல்லியில் அணு உலை எதிர்ப்பாளர்கள் அறிவிப்பு

புதுடெல்லி: மார்ச் 15-ல் 'கூடங்குளம் சலோ' என்ற பெயரில் கூடங்குளம் நோக்கி பேரணி மேற்கொள்ளப்போவதாக, டெல்லியில் அணு உலை எதிர்ப்பாளர்கள் திங்கள்கிழமை அறிவித்தனர்.

கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு எதிராக போராடும் மக்களை இழிவுபடுத்துவதை நிறுத்த வெண்டும் என்று அரசுக்கு அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும், கூடங்குளம் மக்களின் அச்சம் போக்கப்படும் வரை, அங்கு அணு உலைத் திட்டத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும், இப்பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்றும் அணு உலை எதிர்ப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து சி.என்.பி.டி. (Coalition for Nuclear Disarmament and Peace) அமைப்பின் தலைவர் பி.கே.சுந்தரம் இன்று டெல்லியில் நிருபர்களிடம் கூறுகையில், "நாடு முழுவதும் உள்ள மக்களை கூடங்குளம் பகுதிக்குச் சென்று, உண்மையை அறிந்துக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துவதற்கே மார்ச் 15-ம் தேதியில் 'கூடங்குளம் சலோ' போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது," என்றார்.

அணு உலை எதிர்ப்பாளர்கள், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினர் கையெழுத்திட்ட அறிக்கை ஒன்றை அவர் வெளியிட்டார்.

அதில், கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு எதிராக போராடி வருவோரை நசுக்கும் நடவடிக்கையை அரசு கைவிட வேண்டும். போராட்டக்காரர்கள் மீது வேண்டுமென்றே குற்றச்சாட்டுகளை சுமத்துவதை நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம். மாறாக, நியாயமான முறையில் பேச்சுவார்த்தைக்கு அரசு முன்வர வேண்டும்," என்று பி.கே.சுந்தரம் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய ஆலோசனைக் குழு உறுப்பினர்களான அருணா ராய் மற்றும் ஹர்ஷ் மந்தர், ஆர்வலர்கள் அருந்ததி ராய், ராமச்சந்திர குஹா உள்ளிட்டோரும் அந்த அறிக்கையில் கையெழுத்திட்டுள்ளனர்.

கூடங்குளம் போராட்டத்துக்கு வெளிநாடுகளில் இருந்து நிதியுதவி வருகிறது என்ற பிரதமர் மன்மோகன் சிங்கின் குற்றச்சாட்டை கடுமையாகக் கண்டித்துள்ள அணு உலை எதிர்ப்பாளர்கள், அணு இழப்பீட்டு மசோதா மீதான வெளிநாடுகள் தரும் நெருக்கடியை சமாளிப்பதற்காகவே இவ்வாறு செயல்படுவதாக குற்றம்சாட்டியுள்ளனர்.

மேலும், கூடங்குளம் அணு மின் நிலையத்தின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய, பொதுமக்களின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய சுதந்திரமான, வெளிப்படையான ஆய்வுக்குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்றும் அரசுக்கு அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.