Published:Updated:

தவறுகளைக் கூறுவதே சிஏஜியின் பணி: பிரணாப் கருத்து

தவறுகளைக் கூறுவதே சிஏஜியின் பணி: பிரணாப் கருத்து
தவறுகளைக் கூறுவதே சிஏஜியின் பணி: பிரணாப் கருத்து

புது டெல்லி, மார்ச் 24: தவறுகளைச் சுட்டிக்காட்டுவதுதான் இந்திய தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரியின் (சிஏஜி) பணி என்று மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.

தவறுகளைக் கூறுவதே சிஏஜியின் பணி: பிரணாப் கருத்து

கடந்த 2004 முதல் 2009 வரை ஏலம் இல்லாமல் சுமார் 100 அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு நிலக்கரி ஒதுக்கீடு செய்யப்பட்டதால் அரசுக்கு ரூ.10 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக சிஏஜி அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

தில்லியில் சனிக்கிழமை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பிரணாப் இது தொடர்பாகக் கூரியது: சிஏஜியின் முதல்நிலை அறிக்கைகள் பெரும்பாலானவை, விசாரணைக்குப்பின் தவறுகள் ஏதும் இல்லை என்று கூறி கைவிடப்படுபவைதான். முதல்நிலை அறிக்கைகளில் 90 சதவீதம், ஒன்றுமில்லை என்று முடிக்கப்பட்டுவிடும். கடந்த 150 ஆண்டுகளாக இதுதான் நடைபெற்று வருகிறது.

சிஏஜி என்று அரசியல்சட்டத்துக்கு உள்பட்ட ஓர் அமைப்பு. அரசின் நிதி சம்பந்தமான விஷயங்களில் தவறு நடைபெறுகிறதா என்பதைக் கண்காணிக்க பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் இருந்து நடைமுறையில் உள்ளது. அவர்களின் பணியே பிழை கூறுவதுதானே தவிர, சரியாக செயல்படுகிறது என்று அரசுக்கு நற்சான்று கொடுப்பது அல்ல. எனவே இது விஷயத்தில் தேவையில்லாமல் சர்ச்சைகளை எழுப்பாமல் இருப்பதுதான் நல்லது என்றார் பிரணாப்.