Published:Updated:

பன்றிக்காய்ச்சல்: மகாராஷ்ட்ராவில் 2 பேர் பலி

Vikatan Correspondent

புனே: மகாராஷ்ட்ரா மாநிலத்தில் ப்னறி காய்ச்சலுக்கு 2 பேர் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
 
மகாராஷ்ட்ரா மாநிலத்தில் பன்றிக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. புனே, மும்பை, நாசிக் போன்ற நகரங்களில் இதன்  பாதிப்பு அதிகமாக உள்ளது. தடுப்பு நடவடிக்கையில், மாநில நிர்வாகமும், உள்ளாட்சி நிர்வாகமும் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
 
புனேயில் கடந்த 2009- ம் ஆண்டு பன்றிக் காய்ச்சல் ஏற்பட்டது. இந்த ஆண்டில் கடந்த மாதம் மார்ச் வரை 12 பேர், பன்றிக்  காய்ச்சலுக்கு பலியாகினர்.   நாசிக்கில் பன்றிக் காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை கடந்த வாரம் வரை 11 ஆக இருந்தது.  நேற்று மேலும் 2 பேர் பலியானதை அடுத்து, இதன் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.
 
சுகாதார துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு ஒன்றில், புனேயில், இந்த ஆண்டில் ரத்த மாதிரி சோதனை நடத்தப்பட்டதில், 250  பேருக்கு பன்றிக் காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டது. மாநிலம் முழுவதும் 300-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 
 
புனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பன்றிக் காய்ச்சல் நோயாளிகளில் 3 பேருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு  வருகிறது. அவர்களின் நிலைமை மோசகமாக உள்ளது.
 
தற்போது நிலவும் பருவநிலை, வைரஸ் கிருமிகளின் வளர்ச்சிக்கு சாதகமாக உள்ளது. இன்னும் 2 வாரங்களில் வெப்பநிலை  அதிகரித்து விடும் என்பதால் வைரஸ் கிருமிகளின் பெருக்கம் இருக்காது. பின்னர் பன்றிக் காய்ச்சல் நோய் பாதிப்பும்  குறையும்”என தெரிவிக்கப்பட்டுள்ளது.