Published:Updated:

' மும்பை தாக்குதலில் சயீத்: பாகிஸ்தானால் மறுக்க இயலாது'

Vikatan Correspondent
 ' மும்பை தாக்குதலில் சயீத்: பாகிஸ்தானால் மறுக்க இயலாது'
' மும்பை தாக்குதலில் சயீத்: பாகிஸ்தானால் மறுக்க இயலாது'
 ' மும்பை தாக்குதலில் சயீத்: பாகிஸ்தானால் மறுக்க இயலாது'

பெங்களூரு: மும்பை குண்டு வெடிப்பில் லஷ்கர் தலைவர் ஹபீஸ் சயீத்திற்கு உள்ள பங்களிப்பை பாகிஸ்தானால் மறுக்க இயலாது என்று  இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா கூறியுள்ளார்.

கடந்த 2008 ம் ஆண்டு நிகழ்ந்த மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் ஹபீஸ் சயீத்துதான் என்று குற்றம்  சாட்டியிருந்த இந்தியா, அது தொடர்பான அனைத்து ஆதாரங்களையும் அளித்த்ருந்தது.

இந்நிலையில் சயீத் குறித்து தகவல் தருபவர்களூக்கு பரிசு வழங்கப்படும் என்று அமெரிக்கா சில தினங்களுக்கு முன்னர்  வெளியிட்ட அறிவிப்பு, பாகிஸ்தானுக்கு கடும் நெருக்கடியை கொடுத்துள்ளது.

இந்நிலையில் முமபை தாக்குதலில் சயீத்துக்கு தொடர்பு இருப்பதற்கான உறுதியான ஆதாரம் எதையும் இந்தியா அளிக்கவில்லை  என்று பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரசா கிலானி கூறியிருந்தார்.

இந்நிலையில் டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவிடம்,  இது குறித்து கேட்டபோது, கிலானியின் இந்த் கூற்றை முற்றிலும் நிராகரித்தார்.

மும்பை தாக்குலில் சயீத்துக்கு உள்ள பங்களிப்பை பாகிஸ்தானால் மறுக்க இயலாது என்றார்.  மும்பை குண்டு வெடிப்பு  சம்பவத்தில் லஷ்கர் இ தொய்பா நிறுவனர் ஹபீஸ் சயீத்தின் பங்களிப்பு குறித்த அனைத்து தகவல்களையும் பாகிஸ்தானிடம்  வழங்கி விட்டோம் . ஆனால் சயீத் மீது விசாரணை நடத்த பாகிஸ்தானுக்கு விருப்பமில்லை.

சயீத் குறித்த ஆதாரங்கள் அனைத்தையும் இந்திய உள்துறை அமைச்சர் பாகிஸ்தானுக்கு கொடுத்து உள்ளார்.பாகிஸ்தான்  பொறுப்பான விசாரணை நடத்தாது. பிரதமர் மன்மோகன் சிங் பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் சர்தாரியை மதிய விருந்துக்கு  அழைத்து உள்ளார். இருதரப்பு பிரச்னைகளும் முடிவுக்கு வரும் என நம்புகிறேன் என்று அவர் மேலும் கூறினார்.